சிறு அம்மான் பச்சரிசி - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

பாதுபுகல் வேனமுதா லங்கி கருமெழுகாற்
தீதுபுரி மேகவெப்பந் தீருமினும் - ஓதுங்காற்
நேரம்மான் சீரமாக்குந் தின்னுதையஞ் செம்மைநிறச்
சீரம்மான் பச்சரிசிச் சீர்

- பதார்த்த குண சிந்தாமணி

இவ்வம்மான் பச்சரிசி சாதிலிங்கத்தை மெழுகாக்கும்; மேக வெப்பத்தை நீக்கும்; பாலுக்குச் சமமான இதனை தினந்தோறும் உண்பது நன்று

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (30-Sep-21, 7:58 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 29

மேலே