சந்திரகாந்தி - சூரியகாந்தி - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

சந்திரகாந் திக்குத் தழலெரிச்சல் நீர்க்கடுப்பும்
உந்திவலி யாவுமொ டுங்குங்காண் - சந்திலுறும்
பாரிய வாதம் பருகுநீ ரேற்றமும்போஞ்
சூரிய காந்திக்குச் சொல்

- பதார்த்த குண சிந்தாமணி

பித்த எரிவு, நீர்க்கடுப்பு, தொப்புள் வலி இவை சந்திரகாந்திச் செடியால் நீங்கும்; சூரியகாந்திச் செடிக்கு பாரிசவாதம், நீரேற்றம் இவை நீங்குமாம்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (30-Sep-21, 8:05 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 21

மேலே