ஸ ஷ ஜ ஹ சஷ கம்பன் எடுத்தாண்டான்

சரசு வதிலசுமி மகேசுவரி அனைத்துமே
சரஸ்வதி லசஷ்மியும் மஹேஸ்வரி என்பதின்
திருத்தமாம் அனுமனும் ஹனுமன் பெயராம்
சூர்ப்பனகை ஸுர்பனகை குகனும் குஹனாம்
விபீடனன் விபீஷ்ணன் அவனவன் பெயரை
திருத்திப் பெயர்கொலை செய்து
தமிழை நாசஞ் செய்த தாரோ

ஸஷஹஜ சஷயென்ற ஐந்து எழுத்தும்
அரிச்சுவடி எழுத்தாம் ததமிழுடன் வடக்கின்
ஐந்தெழுத்து தவறாது கற்ற தமிழர்
ஐம்பதுக்கு பிறகே வடயெழுத் தைந்தையும்
நீக்கித் தமிழைக் கொன்று போட்டார்
பழத்தை பளமென் பானாம்
ஐந்தெழுத் தினைநீக் கியெழுது யென்றானே


....

எழுதியவர் : பழனி ராஜன் (30-Sep-21, 11:37 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 40

மேலே