கழற்சி இலை - நேரிசை வெண்பா

கழற்சி இலை
நேரிசை வெண்பா

விரைவாதஞ் சூலையறும் வெட்டையனல் ஏகும்
நிரைசேர்ந்த குன்மம் நிலையா - துரைசேர்
அழற்சி விலகும் அருந்திற் கசப்பாங்
கழற்சியிலை யென்றுரைக்குங் கால்

- பதார்த்த குண சிந்தாமணி

இந்த விதை வாதம், சூலைக்கட்டு, பிரமேகம், சுரம், பல்வகை குன்மங்கள், உள்ளழலை ஆகியவற்றை ஒழிக்கும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (30-Sep-21, 6:00 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 24

மேலே