இம்சை
இம்சிப்பது
எப்போதும்
இம்சை தான்.
ஆனால்
சில இம்சைகள்
இல்லாமலிருப்பதும்
இம்சை தான்.
அப்படி
ஒரு இம்சை தான்
நீ.....
என்றேன்.
இவ்வளவு சொல்வதற்கு
பதிலாக,
நீ
என்னை,
"இம்சை"
என்றே சொல்லியிருக்கலாம்
என்றாள்.
அவளே
ஆசைப்பட்டு
கேட்டுவிட்டாள்...
எனவே
அவளிடம் சொன்னேன்...
நீ
ஒரு
இம்சை.
✍️கவிதைக்காரன்.