உன் அறிவுக்கு எட்டிய காதல்
உன் அறிவுக்கு எட்டிய காதல், என் அறிவுக்கு எட்டவில்லை,
ஏனோ உன் உள்ளம் அதை மதித்து நடக்க
எனக்குள்ள மதிப்புகிட்டவில்லை.
பாசிச்செடி படர்ந்த என் மனதிற்கோ
பவளமணி உன் அன்போ விளங்கவில்லை...
பாதியில் வளர்ந்த காதல் சந்தேகத்தில் முடிவது ஏனோ!!
ஆதியில் தோன்றிய காதல் ஆண்டுகள் கடந்தும் நிலைப்பது ஏன்!
பக்குவமாய் பேசி வந்த காதல் பம்பரமாய் சுழல்வது ஏனோ!
புரிந்து வந்தேன் புதிய மலரை தேடி
விரைந்து எப்பொழுது வருவாய் கார்த்திகை தீபச்சுடர் ஏற்ற.....
செந்தமிழ் புலவன்