தேடித் தேடி அலைகிறேன்
கடந்து போகிறது
நிகழ்வுகளும் நாட்களும் ...
கரைந்து போகிறது
நிமிடங்களும்
நொடிகளும் ...
கூடுகிறது
வயதும்
அனுபவமும்...
பெருகுகிறது
கவலையும்
நோயும் ...
மாறுகிறது
சூழ்நிலையும்
தலைமுறையும் ...
தேய்கிறது
தேகமும்
ஆயுளும்...
வாழ்க்கையின்
மாற்றங்கள்
மறுப்பில்லை ...
இயற்கையின்
கூற்றுக்கள்
மாற்றமில்லை...
ஏற்றமும்
இறக்கமும்
சமுதாயத்தில்...
பிரிவுகளும்
பிணக்குகளும்
சமூகத்தில்...
சாதிகளும்
சச்சரவுகளும்
மனிதருக்குள் ...
ஆசைகளும்
கோபங்களும்
மனங்களுக்குள் ...
பிரிவுகளும்
சர்ச்சைகளும்
உறவுகளுக்குள்...
காழ்ப்புணர்வும்
கசப்புணர்வும்
உள்ளங்களில் ...
மாறாதவை
அனைத்தும்
மண்ணிலே...
தீராதவை
என்றும்
பூமியிலே ...
நித்தமொரு
நிலையாக
நகர்கிறது...
உள்ளத்தில்
சுமைகள்
கூடுகிறது...
நேயமுள்ள
நெஞ்சங்கள்
மறைகிறது..
உதவுகின்ற
உள்ளங்கள்
குறைகிறது...
சூழ்ச்சிகள்
வெல்கின்ற
சூழலானது...
நேர்மையே
நேர்வழியை
மறந்துவிட்டது ...
அரசியல்
என்பது
சகதியானது..
ஊழலும்
நாட்டில்
நிரந்தரமானது...
பொறாமை
பொங்கி
வழிகிறது...
பொறுமை
போட்டியில்
தோற்றது...
அமைதி
அலைகடலில்
கலந்தது...
பகையின்
புகைச்சல்
மேகங்களாகுது ..
சாதிசமயங்ஙள்
தலைவிரித்து
ஆடுகிறது..
சச்சரவுகள்
கலவரமாக
வெடிக்கிறது...
நாளைய
தலைமுறை
தவிக்கிறது..
நானிலம்
போர்க்களமாய்
மாறிவிட்டது...
மாற்றுலகம்
காணத்
துடிக்கிறேன்..
கனவிலும்
தேடித் தேடி
அலைகிறேன்...!
பழனி குமார்
5.10.2021