கண்ணன் வழியில்
நாவே கண்ணபிரான் நாமம் பாடி துதித்திடு
காதுகளே சதா அதைக் கேட்டு மகிழ்ந்திடு
கண்களே கண்ணன் வடிவழகில் மயங்கிடு
நாசியே கண்ணன் துளசி மாலை வாசத்தில் மயங்கிடு
சிரசால் கைகளால் கால்களால் சாட்டாங்கமாய்
மண்ணில் விழுந்து கண்ணனை வணங்கிடு
கண்ணனல்லால் யார் உனக்கு வாழ்வின்
ரகசியம் அறிய வழிகாட்டுவார் அதனால்
தினமும் கண்ணன் கீதையில் ஒரு பாவாவது
படித்து இறை வழி தேடிட பார் என்மனமே