மனிதரும் மனிதமும் - கட்டளைக்கலித்துறை

உரலிலே சிக்கிய பாக்காய் இடிபட உள்ளமுமே
மரமென அஞ்சா நிலையிலே நின்று உடலதுமே
தரமிலா வார்த்தையை கேட்டே துவண்டு களைத்தவாரே
குருதியின் ஈர்ப்பினால் குப்பென நீராய் வியர்த்திடவே --- (1)

அறமிலா சுற்றிடும் வெற்று மனிதரின் துர்வார்த்தையே
அறவிலா மெய்யாய் இருப்பினும் சொல்லுதல் நன்றாகவே
தெறிக்கும் விதமாய் விளம்பியே நம்மைப் துயரத்திலே
கறமாய் அமிழ்த்தும் மனிதரை தீயென காணுவோமே --- (2)

உண்ண உணவினை கக்கியே மீண்டுமே நக்கிடுமே
அண்ணம் நரகலை உண்ணும் ஞமலி அதுபோலவே
உண்மை வழியிலே வாழும் பலரையும் மாற்றிடவே
புண்மை கருத்தால் மிரட்டி பணியவே வைப்போரையே --- (3)

இம்மனி தர்களும் தூய்மையின் சீலராய் ஏற்றவரே
தம்மன துள்ளே உயர்ந்த இடத்திலே வைத்தவாறே
பம்மும் நிலையையும் கைவிடும் நாளிலே நன்மையாமே
நம்மையே நாமே சரியாக் குவதுவே நன்மைதானே. --- (4).
----- நன்னாடன்.

பொருள்
--------------
அறவு - இல்லையாதல்
தெறிக்கும் - சிதறும்
புண்மை - அற்பம், குற்றம், இழிவு, ஈனம்;

எழுதியவர் : நன்னாடன் (6-Oct-21, 11:08 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 54

மேலே