ஒரு கவிதை சில வரிகள்

உணர்ச்சிகளின்
குவியலாய்
ஒரு கவிதை

படிக்கத்-
தொடங்கினேன்

இருவரின் தாராள
தமிழ் நடையில்
கடைசி வரிகள்

"கீழ் உதடுகள்
சிவந்து சிவக்க
தடம் பதிக்கின்றன
"முத்தங்கள்"

இதற்கு மேல்
எல்லாம் உங்கள்
கற்பனையே"...

என்றிருக்க
படித்து முடிக்க
மனமில்லாது
திரும்ப திரும்ப
படிக்கிறேன்

கண்கள்
சிவக்க சிவக்க...

எழுதியவர் : மேகலை (7-Oct-21, 11:07 pm)
சேர்த்தது : மேகலை
பார்வை : 244

மேலே