காதல் தோல்வி

இன்று மதியம்,
எனது கவிதைகளின் ரசிகன்,
வேல் முருகன் என்பவர்,
என்னை
அலைபேசியில் அழைத்தார்.

"அண்ணே, காதல் உண்மையான தோல்வினா என்னன்ணே...?.",
என்றார்.

"தம்பி,
பரஸ்பரம் ஈர்ப்பு
குறைந்து விட்டால்,
அது காதல் தோல்வி..."
என்றேன்.

"இல்லண்ணே, இன்னும் சிறப்பா சொல்லுங்கண்ணே... ஆனால் இரண்டே வரிகளில்...'
என்றார்.

"காதலர்கள்
தோற்பது
கட்டாயத் தோல்வி.

காதலே
தோற்பது தான்
காதல் தோல்வி..."

இதுதான் நான் எழுத நினைத்தது.
ஆனால்,
ஏனோ இதில், திருமதி.கவிதைக்காரனுக்கு உடன்பாடு இல்லை.
வேற மாதிரி சொல்லுங்க, என்றாள்.
பிறகு
பிறந்தது
பின்வரும் கவிதை.

"காதலே
தோற்பது தான்
காதல் தோல்வி...
காதலர்கள்
தோற்பதல்ல...."

இது கவிதைக்காரி வெர்ஷன்.
எது பரவாயில்லை என்பதை
எழுதச்சொன்ன
வேல்முருகனே
தீர்மானிக்கட்டும்...

✍️கவிதைக்காரன்

எழுதியவர் : கவிதைக்காரன் (7-Oct-21, 6:07 pm)
சேர்த்தது : கவிதைக்காரன்
Tanglish : kaadhal tholvi
பார்வை : 120

சிறந்த கவிதைகள்

மேலே