காதல் சித்திரம்
பிரியமானவளுக்கு பிரியமுடன்
காதல் சொல்ல போகிறேன்
சிதறி போன என் இதயத்தை
உன் பார்வையாளே உயிர்பெற
செய்தவளே
கோடி கனவுகளை கண் முன்னே
காட்டியாவளே
கோடை வெயிலிலும் குளிரை
தந்தவளே
அழகு மயிலாக என்னை கடந்து
சென்றவளே
என்னை கவர்ந்து விட்டவளே
காதலை நொடியில் எனக்கு உள்ளே
வர வைத்தவளே
என் வாழ்வுக்கு அர்த்தம் சொல்ல
வந்தவளே