கோவிந்தா அவன் நாமம்
கோவிந்தா அவன்
நாமம்.
கோவில் மணி
ஓசையிலே,
கோவிந்தன் உன்னை
அழைக்கின்றான்.
மறு கேள்வியின்றி,
மனதில் அவனை
மலரவிடு.
ஒழிந்து விடும்
உன் கவலை,
ஓய்ந்து விடும்
உன் மனம்.
ஓடுவதை விட்டு
விட்டு,
ஓதி விடும்
அவன் நாமம்,
தினம் தினம்.
ஆக்கம்,
சண்டியூர் பாலன்.

