ஆத்துமிகா கொளத்துமிகா

தம்பி, நீ வேலை கெடச்சுதும் வெளியூருக்குப் போன. (இ)ரண்டு வருசம் கழிச்சு ஒரு வாரம் விடுப்புல வந்த. ஒடனே உன்னோட மொறைப் பொண்ணைக் கல்யாணம் பண்ணீட்டு போனவன் மூணு வருசம் கழிச்சு நம்ம ஊருக்கு வந்திருக்கிற.
######
என்ன அண்ணே செய்யறது. வடமாநிலத்தில வேலை. நான் இல்லனா எங்க நிறுவனத்தில ஒரு வேலையும் நடக்காது.
######
சரி சரி. உங் கையப் பிடிச்சுக்கிட்டு நிக்கற பெண் குழந்தை உன்னோட குழந்தையா? அதனோட பேரு என்னடா தம்பி?
######
ஆமாம் அண்ணே. எம் பொண்ணு பேரு
ஆத்மிகா (Atmika)
@@@@@@
ஆத்துமிகாவா? இந்திப் பேரு மாதிரி தெரியாது.
#######
அண்ணே, போக்குவரத்து இல்லாத நம்ம ஊரில ஐம்பது வயசுக்கு கீழே உள்ள அத்தனை பேரோட பேருங்களும் இந்திப் பேருங்க. இந்தி பேசற மாநிலத்தில் இருகக்கிற நான் என் குழந்தைக்கு தமிழ்ப்பேரை வைக்க எனக்கு பைத்தியமா பிடிச்சிருக்கு?
@@@@@@@@@
நீ சொல்லறது சரிதான்டா தம்பி. இன்னோரு பெண் குழந்தை பொறந்தா அதுக்கு 'கொளத்துமிகா' - னு பேரு வச்சுருடா.
@@@@@@@
இன்னோரு பெண் குழந்தை பொறந்தா அதுக்கு வைக்கிற பேரைப்பத்தி யோசிக்கலாம் அண்ணே.

■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
தமிழ்ப் பெயர்கள் தமிழரின் அடையாளம்
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
Atmika = Omnipresence

எழுதியவர் : (11-Oct-21, 6:22 pm)
சேர்த்தது : அன்புமலர்91
பார்வை : 71

மேலே