அன்னை தெரசா

இவர் தொழுநோயாளிகளின்
கை குணமாக வேண்டி
தொழுகை செய்தவர்

அழுகை புரிந்த நோயாளிகளின் அழுக்கை துடைத்தவர்

இவர் தாயின் கருவறையில் பிறக்காது கோயில் கருவறையில் பிறந்தவர்

அனைவரும் குழந்தையை வயிற்றில் சுமந்து அன்னை ஆகும்போது இவர் வயிற்றில் சுமக்காது நெஞ்சில் சுமந்து அன்னையானவர்

இவர் யார் மனதையும் காயப்படுத்தி பேசாத ஆகாயம்
இவர்
பலர் ரணங்களை
குணப்படுத்திய ஆபரணம்

இவர் ஆதரவற்றோர் வாழ்வில் ஒளி காட்டிய அகல்
இவர் அன்பின் நகல்
கடவுளிடமிருந்து தெறித்த துகள்
இவர் விழித்திருக்கும் நேரம் தான் ஏழை நோயாளிகளுக்கு பகல்

இவர் நோய் வந்தவர்களை சேயாய் காக்கும் தாய்
மரணம் வரை போய் வந்தவர்கள்
நிம்மதியாய் படுத்துறங்கும் பாய்

இவர் யாருக்கும் தாரம் ஆகாது
துன்புறுவோர்க்கு ஆதாரமாய்
வாழப் பிறந்த அவதாரம்

இவர் முக்காடு அணிந்த தீக்காடு
சீக்கோடு வந்தவர்களின் வாழ்வை ஆக்கினார் பூக்காடு

இவர்தான் உண்மையில் அதிமுகவின் தலைவி
அதிமுக என்றால்
அழுது திண்டாடுவோர் முன்னேற்ற கழகம்

உலக அழகி ஐஸ்வர்யா ராய் என்றால்
உண்மையில் உள்ளத்து அழகி அன்னை தெரசாதான்

ஆதரவற்றோரின்
வாழ்வு கிடந்தது தரிசா
அவர்களுக்கு உணவு
கிடைத்தது சிறுசா
அவர்கள் கதறி அழுதனர் தன் குறைகளை முரசா
அழுவோர்க்கு கைகொடுத்தார் ஒருவர் பெருசா
அவர் பெயர் தான்
அன்னை தெரசா

நாம் வாழ்ந்தால் இவரைப் போல் வாழ வேண்டும்
இல்லையெனில் வெறும் கூடாக தான் மண்ணில் வீழ வேண்டும்

எழுதியவர் : குமார் (12-Oct-21, 10:38 pm)
Tanglish : annai therasa
பார்வை : 234

மேலே