ஏங்குகிறேன்

தவழும் வயதில் தாய் மடிக்காய் ஏக்கம் கொண்டேன்
தத்தி நடக்கையில் தந்தை விரலுக்காய் ஏக்கம் கொண்டேன்
பருவத்திலே நல்ல தோழிக்காய் ஏக்கம் கொண்டேன்
வாலிப பிராயத்தில் என் லட்சியத்திற்காக ஏக்கம் கொண்டேன்
மங்கை ஆனதும் மணவாளனுக்காய் ஏக்கம் கொண்டேன்
மனம் முடிந்ததும் பால் வாசம் மாற மழலைக்காய் ஏக்கம் கொண்டேன்
கையில் பிள்ளை ஏந்திட அவள் வாழ்கை எண்ணி ஏக்கம் கொண்டேன்
காலங்கள் உருண்டோட தள்ளாடும் வயதிலே தனிமை வசத்திலே ஏக்கம் கொள்கிறேன்
மீண்டும் என் தவழும் வயதிற்காய்
எல்லாம் ஏக்கமாய் மாறிட இறைவன் எல்லாம் தந்தான்
ஆனால் எங்கே நான் அவனை மரவேனோ என எண்ணி
என்மீது கொண்ட அதீத அன்பால் தூரமாகவே அனைத்தையும் வைத்தான்
எட்டி பிடிக்கும் ஆசை இல்லை, எட்டி நிற்கவும் மனம் இல்லை
ஏக்கம் மட்டுமே நெஞ்சில் உண்டு, என்னிடம் விளையாடிடும் இறைவன் கண்டு
கள்ள கோபம் நான் செய்ய, என் கோபம் தணியும் வரை
வேண்டியதை தந்து சற்று சிரிக்கையில், அதை பற்றிக்கொண்டு
அவன் என் மனம் நினைத்துக்கொண்டே இருக்க எண்ணிடுவான்
ஏக்கம் கொண்ட நான் அவனை நோக்கும் திசை மறந்து
தேடினேன் தொலைந்த என் கடந்து வந்த வாழ்கையை

இப்படிக்கு
அசையும் நாற்காலியில் அசையாமல்
நான்

எழுதியவர் : ஹேமாவதி (13-Oct-21, 1:41 am)
சேர்த்தது : hemavathi
Tanglish : yengugiren
பார்வை : 517

மேலே