உண்மை ஞானம் தேடி அடைவோம் வாணியின் அருளால்

ஆழம் தெரியா கடல் அல்லவோ கல்வி
கற்க கற்க இன்னும் கல்லாதது எத்தனையோ
என்று திகைக்கவைக்கும் அதனால் அல்லவோ
'கற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலகளவு'
என்று உற்ற கலைமகளும் ஓதுகின்றாள் ....

முழுஞானம் உடையவன் தெலும்பா குடம்போல்
அரைஞான வீணன் ஞானம் அரைக்கூடம்போல

இன்று கலைமகளுக்கு உற்ற திருநாள்
வீணானவம் துறந்து உயரஞானம் மெய்ஞானம் தேடுவோம்
வாணியின் இன்னருளால் அடைவோம் மகிழ்வோம்
அதுதானே இம்மையில் பேரின்பம்
மறுமைக்கு வழிகாட்டி.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (15-Oct-21, 6:23 pm)
பார்வை : 54

மேலே