தூது வருமா
தாகமோ தீர்ந்தாலோ
தண்ணீரை ரசிப்பேனா
தள்ளி நின்று நீ கான
கூடுவதேன் தாகமோ
மோகமோ தீர்ந்தாலோ
கலவி ஞானம் படிப்பேனா
மொட்டில் உந்தன் பூ மலர
கூடுவதேன் மோகமோ
சோகமோ முடிந்தாலோ
சோகப்பாடல் படிப்பேனா
சொல்லில் மட்டும் உதடு பேச
கூடுவதேன் சோகமோ
வேகமோ முடிந்தாலோ
வெறுமையாக இருப்பேனா
வெள்ளி கொழுசாய் நீ சினுங்க
கூடுவதேன் வேகமோ