இரவு எல்லாம்
முழு நிலவின் மறுபக்கம் கருமையா வெண்மையா?
என்னவளின் புருவங்கள் வெம்மையா தண்மையா??
லாந்தல் ஒளி இயற்கையா செயற்கையா?
அவள் கூந்தல்நுனி முடிவா முதலா??
எனையாளும் தமிழ்மொழி ஆண்மையா பெண்மையா?
இதயமாளும் அவள்மொழி போதையா பாதையா??
தென்மேற்கு தென்றல் சுகமா சோகமா?
அவள் காற்குழற்கழல் கவிதையா ஹைக்கூவா??
என விடைகள் இல்லாது இன்னும் பல……
விழித்திருக்கும் இரவு எல்லாம் எனை தூங்கவிடாத வினாக்கள் ……..