பிதாசி

என்னடா நண்பா உன்னோட கன்னம் இரண்டும் கொழுக்கட்டை அளவு வீங்கி இருக்குது. தலையில ஒரு கொழுக்கட்டை. அழுதிட்டு இருக்கிற?
@@@@@@@
மனைவி.... மனைவி...மனைவி....
@@@@@@
உன் மனைவி கொடுத்த பரிசா?
@@@@@@@
ஆமான்டா. கன்னத்தில குத்து. மண்டை மேல சப்பாத்தி கட்டை....
#@#@@#@
புரியது. புரியதுடா. எதுக்கு?
@@@@@@
எதுக்கா? நான் பிறந்த ஒரு வருசத்தில அம்மா பாம்பு கடிச்சு இறந்துட்டாங்க. எனக்கு அஞ்சு வயசு ஆகிறபோது ஒரு விபத்தில என் அப்பா இறந்துட்டாரு. என்னை வளர்த்தது என்னோட அத்தை. அம்மா அப்பா நினைவா என் அத்தையை " மாதாஜி"னு கூப்புடுவேன். சில சமயம் "பிதாஜி"னு கூப்புடுவேன். கல்யாணம் ஆனதுக்கா அப்பறம் என் மனைவி பிரியாவையும் அவ பேரைச் சொல்லிக் கூப்புடாம "மாதாஜி, பிதாஜி'"னு மாறிமாறிக் கூப்புடுவேன். அவளும் பொறுத்துட்டா.
@@@@@
இந்தக் கொழுக்கட்டைங்களுக்கு என்னடா காரணம்?
@@@@@@
சொல்லறேன். நேத்து வாய் தவறி "மாதாசி, பிதாசி"ன்னு சொல்லிட்டின்டா. அவளுக்கு மூக்குச் சிவக்கக் கோபம் வந்து, "ஏன்டா புருசா, நான் "மா தாசியா"ன்னு கேட்டுட்டு இரண்டு கன்னத்திலயும் மாறிமாறிக் குத்தினாடா. கைக்கு ஓய்வு அஞ்சு நிமிசம் ஓய்வு. அப்பறம் "என்டா புருசா நான் பி தாசியா?"ன்னு மாறிமாறிக் கேட்டுட்டே சப்பாத்திக் கட்டையில நடு மண்டைல அவ கோபம்தீர என்னை அடிச்சாடா.
@@@@@@@
அடப் பாவமே. ஏன்டா மடையா "தாசி"ன்னு சொன்னா விலைமகளே பொறுத்துக்கமாட்டா.
@@@@@@
சரி இப்ப என்ன செய்யறது?
@@@@@@
வா வீக்கத்தைக் கொறைக்க மருத்துவரப் பார்க்கலாம். வீக்கம் சரியானதும் நேரா உன் மனைவி கால்ல விழுந்து "என்னை மன்னிச்சுக்கா பிரியா. இனிமேல் உன்னை "பிரியா, பிரியா"ன்னுதான் கூப்புடுவேன்"னு சொல்லி அழுடா. அப்பதான் உன் மனைவி உன்னை ஏத்துக்குவாங்க.
######.
நன்றிடா நண்பா.
@@@#@@@
சரி வா. மருத்துவரைப் பாத்துட்டு இன்றிரவு எங்க வீட்டில தங்கிக்கா. கோபம் தீர்ந்தப்பறம் உன் மனைவியே செல்பேசில கூப்புடுவாங்க.
@@@@@@
சரிடா. சரிடா.

எழுதியவர் : மலர் (19-Oct-21, 8:00 pm)
பார்வை : 67

மேலே