காதல் கவிதை
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
*கவிதை*
படைப்பு *கவிதை ரசிகன்*
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
குளத்தில்
தாமரை இல்லாத குறை
நீங்கி விடுகிறது
"அவள்" குளிக்கையில்...!
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
வண்ணத்துப் பூச்சியே!
எழுந்து போ
நீ அமர்ந்திருப்பது
நீ நினைப்பது போல்
"மலரல்ல "
என்னவளின் "முகம்....!!!"
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
என்னவளே!
உன் கொழுசொலியை
நான்
கேட்காத நாட்களில்....
யாரும்
கேட்டிருக்க முடியாது
என் "சிரிப்பொலியை..."
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
பெண்ணே!
உன் உறக்கத்திற்கு
இடைஞ்சலாக
இருக்கிறது என்றால்...
என் இதயத் துடிப்பையும்
நிறுத்தி விடுவேன்..
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
பெண்ணே!
ஒருவேளை
மனமிரங்கி
எனக்கு
இறுதி அஞ்சலி
செலுத்த வரும்போது
தப்பித்தவறிக்கூட
" உன் விரல்கள்"
என் மீது
பட்டுவிடப்போகிறது....
இயற்கைக்கு மாறாக
இறந்த நாள்
"மீண்டும்
எழுந்தாலும் எழுந்து" விடுவேன்....!!!
*கவிதை ரசிகன்*
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹