காதல் என்றால் கன்னத்தில் போடு காதில் போடாதே

காதலிக்க தேவை ஒரு பெண் ஒரு ஆண்
ஒரு பெண் தேடுவது ஆணிடம் ரகசியம்
ஒரு ஆணுக்கு ஒரு பெண் மிக அவசியம்
காதலிக்க வயது என்பது ஒன்றுமில்லை
இயற்கையை காதலிக்க வயசு தேவையா?

இயற்கை எழிலை காதலித்தால் அற்புதம்
இதற்கு முன்னே மற்ற காதல்கள் அற்பம்
ஒரு இளம் பெண்ணை கண்டால் சிற்பம்
வயதான பெண்களிடம் காதல் சொற்பம்

இயற்கையாக காதலிக்க அன்பு தேவை
இயற்கையை காதலிக்க ஊட்டி தேவை
செயற்கையில் காதலிக்க பணம் தேவை
செயற்கையாக காதலிக்க நடிப்பு தேவை

காதல் செய்வதற்கு ஆசை, நேரம் தேவை
பலநேரம் ஆசை உந்தும் நேரம் இருக்காது
நேரம் கிடைப்பினும் ஆசையே வெறுக்கும்
ஆசை நேரம் கிடைப்பின் பார்ட்டி சுளிக்கும்

காதலுக்கு முற்காலத்தில் வாய்ப்பு குறைவு
காதல் இல்லா வாலிபம் இந்நாளில் குறைவு
அக்காலத்தில் தனியிடம் இருந்தது ஒதுங்க
இப்போது பூங்காவில் இடமில்லை ஒதுங்க

சொல்லில் கவிதை வடித்தது முற்காலத்தில்
செல்லில் எதுவும் அனுப்பலாம் இக்காலத்தில்
விலை இல்லா இன்சொலில் காதல் கடந்தது
விலை மிகுந்த செல்லில் எல்லாமே நடக்குது

முன்னே காதலித்தவர் கல்யாணம் செய்தனர்
இப்போ தாலி கட்டி வேறு காதல் தொடங்குது
காதலா அல்லது கல்யாணமா இதிலே ஒன்று
அது இருந்தா இதில்லை என்பதுதான் இன்று

கல்யாணம் செய்யவே அக்காலத்தில் காதல்
காதல் மட்டும் செய்யவே இக்காலத்து காதல்
அந்த காலத்தில் காதலித்தவர் தம்பதியினர்
இப்போது காதலன் காதலிக்கு பாய் ப்ரண்டு
இவனுக்கு காதலி சிலிர்க்கும் கேர்ள் ப்ரண்டு

இப்போ காதல்னா என்னான்னு புரியலை சாமி
நீங்க கொஞ்சம் அதிக விவரம் தெரிஞ்ச ஆசாமி
காதலுக்கு ஜாதி இல்லை மதம் மொழி இல்லை
காதலுக்கு இலக்கணம்? அப்படி ஏதும் இல்லை!

ஆனந்த ராம்

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (29-Oct-21, 3:21 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 157

மேலே