தீபாவளி

சிரிப்போ மத்தாப்பு
சிந்தனையோ சரவெடி
ஆட்டம்காண வைப்பதோ அணுகுண்டு
சுத்த வைப்பதோ சங்கு சக்கரம்
பேசுவதோ சாட்டை அடி
விஷமாவதோ பாம்பு‌ மாத்திரை
நெஞ்சில் எறிவதோ கல்பட்டாசு
காசை கரியாக்குவதோ புஸ்வாணம்
இலக்கே இல்லாததோ ராக்கெட்
வெடிக்கலாமா வேண்டாமா
என்பதோ ஓலைபட்டாசு
இன்று இருப்பவர்
நாளை இல்லை என
நமட்டு சிரிப்போ பென்சில்
வாழ்க்கை இப்படித்தான்
சடுதியில் மாறுமென
வர்ண ஜாலம் காட்டுவதோ
வாணவேடிக்கை!!!

எழுதியவர் : உமாபாரதி (6-Nov-21, 12:41 pm)
சேர்த்தது : உமாமகேஸ்வரி ச க
Tanglish : theebavali
பார்வை : 40

மேலே