நூல்
அறிவுடைச் சான்றோர் அகன்றஇப் பாரைச்
செறிவுடைச் சொல்லும் அரும்பொருளும் ஏந்தி
அழகுறச் சாற்றிய காகிதக் கற்றைகள்
புத்தக மென்பர்மாந் தர்.
நூல்கள் சிறப்பெனி னும்அத னுட்சிறந்த
நூலெடுத்தே கற்றிடல் வேண்டும், அதனாலே
பெற்றிடப் போகும் அறிவு, உயர்மாந்தர்
என்னும் தகைமை தரும்.