மாற்றம் பெற்ற மகத்துவம்
- குறள்வெண்செந்துறை
அரசுகள் அழிந்து எப்போது அரசியல் உருவானதோ
அரவமாய் ஊழலும் நாட்டில் ஆட்சியில் அமர்ந்தது
மக்களால் தேர்ந்து எடுக்கப் படுகின்ற ஒருவரால்
மக்களும் உயர்வே அடையாது இருப்பதே அரசியலே
தேர்தலில் போட்டியிட வைப்புநிதி இல்லாத ஒருவர்
தேர்தலில் வென்று விட்டால் கணக்கிலா பணம்புரளும்
சட்டம் என்பதோ அரசியலின் ஆணிவேர் அதுவே
திட்டத்தை ஆக்கவும் நீர்த்திட வைக்கவும் காரணியாய்
பணபலம் உடையோரிடம் சட்டமும் அரசியலும் வில்லாய்
குணம்நிறை உடையோரிடம் சட்டமும் அரசியலும் அம்பாய்
கட்சிகள் முளைத்ததால் காலாணாவுக்கு உகாதவன் தலைவனாய்
கொட்டிக் கொடுப்பதால் கற்பென்ற வாக்கு வியாபாரமாய்
அற்புதம் செய்ய வேண்டிய அரசின் ஊழியர்கள்
அற்ப பணத்திற்கு அடிமையாவதால் யாதும் தொய்வில்
உணவின் தரநிலை உலகமயம் ஆனாதால் இன்று
உணர்வின் தரநிலை உருக்குலைந்து சிதைந்து போனது
---- நன்னாடன்.

