குழந்தைகள் தினம்

வெள்ளை மனம் கொண்ட
உள்ளங்களே
வருங்கால சமுதாயத்தின்
சிற்பிகளே..!!

வெஞ்சினம் கொண்ட மனிதனும்
உந்தன் பிஞ்சு உள்ளத்தின்
மழலை சொல் கேட்டால்
மகுடியின் இசையில் மயங்கும்
நாகம் போல் மயங்கி
தன் சினம் மறந்து விடுவான்...!!

குழந்தை செல்வங்களே
நாட்டின் வருங்கால தூண்கள்
என்பதை எல்லோரும் உணர்ந்து
குழந்தைகளுக்கு
அன்பையும் பண்பையும்
போதித்து வளர்க்க வேண்டும்
என்று சொன்னார் "பண்டிதர் நேரு"...!!

பூ போன்ற மனம் கொண்டவர் "நேரு"
அதனால் தான் தன் சட்டையில்
எந்நாளும் ரோஜா மலரை
சூடி கொண்டே இருந்தார்...!!

வெள்ளை மனம் கொண்ட
குழந்தை உள்ளங்கள் எல்லாம்
"நேரு மாமா" என்று அன்போடு
தன்னை அழைத்தவுடன்
தன் நெடிய உருவத்தை
குழந்தைகளின் உயரத்திற்கு
குறுக்கிக்கொண்டு
தவழ்ந்து மகிழும் குழந்தையை போல்
தவழ்ந்த வண்ணம் கொஞ்சி மகிழ்வார்...!!

இன்று
"ஜவகர்லால் நேருவின்" பிறந்த நாளை
"குழந்தைகள் தினமாக" கொண்டாடும்
அணைத்து குழந்தைகளுக்கும்
"நேருவை" போல்
குழந்தை மனம் கொண்ட
உள்ளங்களுக்கும்
இனிய "குழந்தைகள் தினத்தின்"
நல்வாழ்த்துக்கள் ...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (14-Nov-21, 8:56 am)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 7932

மேலே