அழகி ஒருத்தீ 27-09-2021

அழகி ஒருத்(தீ )27-09-2021

அழகியலுக்கு சாதி
மதம் இல்லையே !

கொன்றை பூவும்
நாணும் அவள் மேனியழகிலே !

சாளரம் திறந்தால் கூந்தலின்
மணம் நாசியிலே !

அவள் கொலுசின் இசைக்கு
சாலையில் கற்களும் சந்தம் பாடுதே !

சொந்தம் கொள்ள வந்வனிடம்
மஞ்சள் நதியென பாயாதே !

வானத்து நட்சத்திரம் ஒன்று
மூக்கில் துயில் கொள்ளுதே !

அமேசான் நதிபோல
வளைவு நெளிவுல்ல இடையினமே !

மங்கையென நினைத்தேனே
மனசில் தவித்தேனே !

மடந்தை இவளென
விழியம்பால் சொன்னாயா !

அரிவையில் வாகைசூடி
அறிந்திட சொல்வாயா !

நெற்றி வகுடில்
குங்கும் பதிப்பாயா !

காதல் நோய்க்கு
அதரத்தால் உரசிடுவாயா !

வம்பாய் பேசி
ஊடல் செய்வாயா !

கூடலுக்கு கணக்கில்லாது
எந்நாளும் வெல்வாயா !

பாரம்பரியம் மிகுந்தவளே
என் பரம்பரையை வளர்ப்பாயா !

அன்பாய் அருகிலே
ஆயுளுக்கும் இருப்பாயா !!!

காதல் வனத்தை பற்ற
வைத்த அழகியே நீ ஒருத்(தீ) !!!

அன்புடன்
த.பிரபு

எழுதியவர் : த.பிரபு (18-Nov-21, 10:56 pm)
சேர்த்தது : த பிரபு
பார்வை : 238

மேலே