அவிச்சல்

அக்காவுக்கு மணமாகி
மூன்றாண்டு ஆனபின்பு
அழகான பெண் குழந்தை
அவளுக்குப் பிறந்தது.
குழந்தைக்கு அவர்கள்
வைத்த பெயர் 'அவிச்சல்'
"அழகான இந்திப் பெயர்
உலகத் தமிழரில் யாரும்
தம் பிள்ளைகளுக்குச்
சூட்டாத பெயர்" என்று
பெருமிதம் கொண்டார்கள்
அக்காவும் மாமாவும்.
அடுத்த குழந்தையும்
பெண் குழந்தயாகப் பிறந்தால்
அதன் பெயர்
என்னவாக இருக்குமென்று
என் கற்பனைக்கு எட்டவில்லை.
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
Avichal = Unmovable