தன்மை இழவேல்
இசங்களைத் தெரியாது
என்பதெல்லாம்
எனக்கு ஒரு பொருட்டல்ல
இசையின் வகைகளைத் தெரியாது
என்பதெல்லாம்
எனக்கு ஒரு பொருட்டல்ல
இலக்கண இலக்கியங்கள் புரியாது என்பதெல்லாம்
எனக்கு ஒரு பொருட்டல்ல
படிமங்களொடு பழகவும் குறியீடுகளொடு கைகுலுக்கவும் வராது
என்பதெல்லாம் எனக்கு ஒரு பொருட்டல்ல
பொருட்படுத்தாத உங்கள் சுபாவங்களை கடந்து செல்லமட்டுமேனும்
நான் ஒரேயொரு கவிதையையாவது எழுதிட
துடித்துக் கொண்டிருக்கிறேன்
பிரம்பாய் மாறிச் சுழற்றப்படும் பார்வைகளும் வார்த்தைகளும் உடையும் காலத்தில் இந்த எழுத்துகளை கையிலெடுத்து கொள்ளுங்கள்...
இவை அத்தனை கடினமாக ஒருபோதும் உங்களுக்கு இருந்துவிடாது!!
- மதிஒளி சரவணன்