கனவிலே நினைவிலே 21112021

கனவிலே நினைவிலே 21/11/2021

என்னென்ன எண்ணுகிறோமோ எல்லாம் நடப்பதும் கனவிலே !

லட்சியங்களை அலட்சியமாக
வென்று காட்டுவதும் கனவிலே !

வேண்டாத பயங்களும்
தொடர்ந்து துரத்துவதும் கனவிலே !

தீண்டாத கற்பனைகளும்
அசைபோட கட்டவிழ்பதும் கனவிலே !

காதலியுடன் ஊடலும்
கூடலும் புரிவதும் கனவிலே!

கனவில் கண்டதன்
பலன் தேடுவோம் ஏட்டிலே !

கனவில் வரும் காட்சிக்கு
பதிலிடுவோம் உறக்கத்திலே !

வாழ்வின் சுவாரசியத்தை
காட்டும் மாய பிம்பம் கனவே !

விழித்திடில் எல்லாம்
மறந்து போகும் நினைவிலே !

கனவானது கானலாய்
காணாமல் போனது வாழ்விலே !

அன்புடன்
த.பிரபு

எழுதியவர் : த.பிரபு (21-Nov-21, 8:51 am)
சேர்த்தது : த பிரபு
பார்வை : 414

மேலே