அந்த ஒரு நாள் -அவளுக்காக

அந்த ஒரு நாள் - அவளுக்காக

அன்புற்ற கரங்களும்
இழைப்பாறிய இமைகளும்
உணர்வற்று போனதேனோ
இன்னும் கொஞ்சம் என்னெஞ்சை ரணமாக்க
மெய்யுற்று அழைத்ததேனோ

திசையெங்கும் என் காதல் நிறைந்தபடி
உணர்வுற்கு சிறையிட்டு
சிலதுக்கு செவியற்று
உன்விழி முன்பு
நின்ற என்னிடம்
உம்மை கொஞ்சம் உறைத்தாய்

என்காதலா என
கொஞ்சம் நிலைகுலைந்தேன்
நெஞ்சம் முழுதும்
ஆயிரம் ஓட்டங்கள்
எண்ணற்ற கேள்விகள்
கேட்டால் மனம் உடைவாய்
உன்விழி கசிந்தால்
என் காதல் கலங்குமே
ஆதலால் கேட்க மறுத்தேன்

ஏற்கக்கூடா அனைத்தையும்
ஏற்கச்சொன்னாய்
உன் கண்ணீரால்
என் காதலுக்காக ஏற்றேன்

இருந்தும் கண்ணீர் துடைத்தேன்
முழுமனதாய்
தோள் கொடுத்தேன்
அரை மனதாய்
அனைத்தும் மறந்தேன் ஒரு நிமிடம்
என் காதலாய் மட்டுமே நின்றாய்

காட்டிய அன்பு காட்டியபடி
கலங்கிய நெஞ்சம் நின்றபடி
விழியோரம் வெள்ளம் பெருக்க
கொஞ்சம் அணையிட்டு
தடுத்தேன் என்னை
மனச்சிறையில் அடைத்தேன்

இருந்தும் என் காதல்
இதுவே இறுதியென உரைத்ததே
உன்னுடனான இறுதி தருணத்தை
கொஞ்சம் நிறையாக்க துடித்ததே

மனதை திடமாக்கி
மாயபுன்னகையிட்டு
வாடிய முகத்தில்
புதுவசந்தம் பிறக்க
பேசிய வார்த்தைகள் ஏராளம்

அழுது அழுது வெந்த விழியினில்
ஓர் ஆனந்தம் பிறக்க
அத்தனை பாடுபட்டேன்
சிரிப்பை மறந்தவள்
தன்னை மறந்து
சிறுபுன்னகையிட்டாள்
அதனை சிறிதும் கலைக்காது
அப்படியே பாதுகாத்தேன்
அந்த காட்சி முழுமையும்

எண்ணற்ற உரையாடல்கள்
இடம்மறந்து நிகழ்ந்திடவே
சொல்ல தவறிய வார்த்தைகள்
சில செவியை வந்தடைய
சொல்லிய வார்த்தைகள் எல்லாம்
எங்கே என மனம் நொந்தாலும்
அவள் நிறைவை எண்ணியே
கடந்தேன் , அவள் ஆறுதலுக்கு
என் காதலை தவிர
வேறொரு மறுந்து அன்றில்லை

நாழி பல கடந்திட
இப்படியே இருந்திட மனம் துடித்திட
மனதை ரணமாக்கி பிரியவே
இறுதியாக ஒரு பயணம்
இரண்டே பாடல்கள்
நினைவலைகள் நெஞ்சை
உலுக்க தேக்கி வைத்திருந்த அனைத்து
கண்ணீரையும் வடித்தால்
அதற்கும் அவளுக்கு ஆறுதல் கூறினேன்
அந்த தருணத்திலும் இறுதியாக
அவள் சிரிப்பை காண முயற்சித்தேன்

கலங்கிய நிலையிலும்
என்காதலை நான் ஒருபோதும் காயப்படுத்தியதில்லை
அதுதான் காதல் எனக்கு
தந்த நிம்மதி
வலியுடன் பிரிந்தாலும்
என் காதல் என்றும் இனிமையே

காதல் விலகினாலும்
காட்சிகள் விலகுவதில்லை
அந்த ஒரு நாள் அவளுக்காக அல்ல
அது என் காதலுக்காக

எழுத்து செ.இனியன்

எழுதியவர் : சே.இனியன் (21-Nov-21, 4:02 pm)
சேர்த்தது : இனியன்
பார்வை : 285

மேலே