அவள் அழகெனும் கவிதை

உன் அங்கம் ஒவ்வொன்றும் அழகின் சின்னம்
வார்த்தைகளால் புனைவது அழகு கவிதை என்றால்
அழகாம் அங்கங்களால் இறைவன் புனைந்த
இயற்கையின் காதல் கவிதையடி நீபெண்ணே
உன்னழகில் என் எண்ணங்கள் கிறங்கி கிடக்க
என்னையே மறந்தேன் உன்நினைவில் நான்
அழகெனும் கவிதை அல்லவோ நீ

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (21-Nov-21, 4:17 pm)
பார்வை : 252

மேலே