உலகத் தந்தை -7
தினம் தோறும் தேடுகிறேன் தேவனை மனமிறங்கும்
கனம் பொருந்திய தேவனே எனக்கு இறங்கும்
மண்ணான நாங்கள் உம்மாலே
மனிதனானோம்- உம்
நிணம் சிந்தி எம்மை மீட்டு எடுத்தீர்
மனம் இறங்கும் மா தேவனே
விண்ணுலகம் செல்வேன் என்ற
எண்ணம் எனக்கில்லை - நான்
பண்ணிய புண்ணியம் ஒன்றும் பெரிதில்லை
கர்த்தரே மனமிறங்கி என்னையும்
உம்மோடு கூட்டிசெல்லும்