அதீத காதல்
தடாகத் தாமரையின் மீது
கொண்ட அதீத காதலால்
மீன் போன்ற விழிகளைக்
கொண்ட கண்ணிகை.....
பிரம்மனிடம் வரம் வேண்டி,
தாமரையின் அருகிலேயே
வாழ்நாளைக் கழிக்கும்
அதீத ஆசையினால்
மீனாக அவதரித்தாளோ?
ஆசை நிறைவு பெற்ற
மகிழ்வின் வெளிப்பாடுதான்
இந்த இனிப்பு முத்தம்,
தாமரையின் தேனுக்கு
இணையான சுவையோடு!!!