திறமைகள் திரை மறைவில்
நேரிசை ஆசிரியபா
(ஒழுகிசை அகவல் ஓசை )
மேடைப் பேச்சை நம்பி டாதே
மயங்கி டாதே அசந்தி டாதே
அறியான் உன்னில் மேலே யவனும்
மேடை பேசும் ஆளெல் லாமே
அரையும் குறையும் தெரிந்த புளுகன்
அவனும் பேசுவன் மனனம் செய்து
அலங்கா ரமாய் அதையே பத்து
இடத்தில் பேசுவன் சுயமாய் சிந்திக்
காதே பட்டியல் அடுக்கு வன்பார்
சட்டென உரைப்பன் பேசத் தயாரா
வாமே டைக்கென் பான்வொன் றையும்
கண்டிலன் யாரும் வாபே சென்றால்
பயந்து ஓடுவன். திறமை சாலி
ஆயிரம் பேர்மறை விலுள்ளார்
ஏனோ வெளிவந் தாரி லையே
.