காட்டாத்தி மரம் - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
அதிசார மந்தமிக வாலித்த காசம்
விதிராம் விஷமும் விலகும் - எதிரொருவர்
மூட்டாத்தீ யென்னுமதி மோகந் தருமணங்கே
காட்டாத்திக் கென்றுளத்திற் காண்
- பதார்த்த குண சிந்தாமணி
காட்டாத்தி மரத்தினால் அதிசாரபேதி, அக்கினி மாந்தம், இருமல் தாவர சங்கம விடம் ஆகியவை நீங்கும்