சா மு க

நகரம் எங்கும் சா. மு. க துவக்கம் என்ற சுவரொட்டிகள். நிருபர் கூட்டத்தில் அக்கட்சியின் நிறுவனத் தலைவர் கர்கர் பர்பர் பேட்டியளிக்கிறார்:
########
ஐயா தங்கள் கட்சியின் சுருக்கமான பெயர் சா.மு.க என்று விளம்பரம் செய்திருக்கிறீர்கள். தங்கள் கட்சியின் முழுப்பெயர் என்ன?
#########
சாதிகள் முன்னேற்றக் கட்சி.
#########
ஐயா, பலர் சாதிகளை ஒழிக்க போராடறாங்க. சாதி மறுப்பு திருமணங்களுக்கு ஆதரவு தருகிறார்கள். இந்த நிலையில் சா.மு.கவை தொடங்குவது சரியா?
########
உங்களுக்கு தெரியாதது இல்லை நடைமுறையில் நாம் பார்ப்பது. சாதி சங்கங்கள் நாடெங்கும் உள்ளன. அவற்றை பெயர் மாற்றம் செய்து அரசியல் கட்சிகளாக மாற்றுகிறார்கள். இது தான் உண்மை. செய்தித்தாள்களில் தொலைக்காட்சி செய்திகளில் கூறப்படும் பல பிரபலங்கள் பெயர்களுடன் சாதிப் பெயர்களும் இணைந்திருக்கிறது. இவர்களால் சாதிகளை ஒழிக்கமுடியுமா?
#######
நீங்கள் சொல்வது உண்மைதான் ஐயா.
#####@
இதிலிருந்து என்ன தெரியுது.
#########
சாதிகளை ஒழிக்க முடியாதுங்க ஐயா.
#########
அதனால தான் சாதிகள் முன்னேற்றக் கட்சியை ஆரம்பிக்கிறேன். இது ஒரு தேசிய கட்சி. சாதிப் பெயருடன் வரும் நபர்களையே எங்கள் கட்சியில் சேர்ப்போம். தமிழகம் புதுவை தவிர நாடெங்கும் எங்கள் கட்சி பலம் வாய்ந்ததாக இருக்கும். அடுத்த பாராளுமன்றத் தேர்ததலில் எங்கள் கட்சி
மூன்றில் இரண்டு பங்கு இடங்களைக் கைபற்றி ஆட்சி அமைக்கும். நன்றி நிருபர் பெருமக்களே. இன்னும் ஓரிரு நாட்களில் எங்கள் கட்சியின் கொள்கைகளை வெளியிடுவோம். நன்றி வணக்கம்.
#########
ஐயா கடைசியா ஒரு கேள்வி. உங்கள் பெயர் பற்றி
#######
'கர்கர்' எனது பெயர். 'பர்பர்' எனது சாதிப் பெயர்.

######################################
இது ஒரு நையாண்டி பதிவு. சாதிவெறியர்களால் நாடெங்கும் பல விரும்பத்தகாத குற்றங்கள் நடக்கின்றன.
நாட்டுப் பற்றுள்ள குடிமகன்கள் இதை வெறுக்கிறார்கள்..

எழுதியவர் : மலர் (1-Dec-21, 9:50 am)
சேர்த்தது : அன்புமலர்91
Tanglish : saa mu ka
பார்வை : 30

மேலே