காதல் புனிதமானது

ஒரு அழகான இயற்கை கொஞ்சும்

ஊர் அந்த ஊரில் காலையில் ஒரு

பெண் பறவைகளுக்கு தீணிபோட்டு

கொண்டு இருக்கிறாள் அந்த

பறவைகளும் காலையில் அவளை

பார்க்க வந்து விடும் அவள்

அன்பானவள் ரொம்ப அழகானவாள்

அவள் தான் சிநேகா.அவள்

பறவைகள் மீது அதிக அன்பு

வைத்தவாள் அவள் குடும்பம் குருவி
கூடு போல் சிறியது சிநேகாவின்

அம்மா பெயர் லட்சுமி,அப்பா பெயர்

வடிவேலன் அவர் ஒரு வாட்ச்மேன்

வேலை செய்பவர் அவர் பக்கத்தில்

உள்ள பெரிய கடைகளை பார்த்து

கொள்பவர் அது மட்டும் இல்லை

குடிபழக்கம் கொண்டவர்.

சிநேகவிற்கு தான் அம்மா அப்பா

இருவரையும் ரொம்ப பிடிக்கும்

ஆனால் அவள் அப்பா குடிப்பது

அவளுக்கு பிடிக்காது அதனாலே

அவள் அப்பா இடம் சரியாகபேச

மாட்டால் அவளின் அம்மா தான்

எல்லாம் எந்த விஷயம் என்றாலும்

அம்மா இடம் தான் சொல்வாள்

அவள் அவர்களின் ஊரில் உள்ள

கல்லூரியில் இரண்டாம் வருடம்

படிக்கிறாள் நல்ல படிப்பவள்.அப்படி

இருக்கும் நேரத்தில் தான் கௌதம்

என ஒருவன் வருகிறான்.கௌதம்

ஜாலியாக இருப்பான் மனத்திற்கு

பிடித்ததை செய்வன் அப்பா ஒரு

டீ தூள் கம்பெனி மேனேஜர் அவரை

புதிய டீ தூள் கம்பெனியை பார்த்து

கொள்ளவேண்டும் என அவர்

முதலாளி அவரை இந்த ஊருக்கு

அனுப்பி வைக்கிறார் அவர் தான்

மகன்,மனைவியை உடனே

அழைத்து வருகிறார் கௌதம் அப்பா

பெயர் பிரபு அம்மா பெயர் பாக்கியம்

அவர்களுக்கு ஒரே மகன் கௌதம்

அதனால் தான் அவன்னை விட்டு

இருக்கா முடியாது என பிரபு உடனே

அழைத்து வந்து விட்டார். கௌதம்

கல்லூரியில் இரண்டாம் ஆண்டு

படிக்கிறான் அவனை இப்போது

அவர்கள் வந்து இருக்கும் ஊரில்

உள்ள புதிய கல்லூரியில் சேர்க்க

வேண்டும் என பிரபு அழைத்து

செல்கிறார் அவனுக்கு சீட்டு

கல்லூரியில் கிடைத்து விட்டது

அவனுக்கு கொஞ்சம் புதிதாக

உள்ளது.சிநேகாவிடம் அவள் தோழி

கவிதா ஏய் புதிதாக ஒருவன் நாம்

கிளாஸ்க்கு வந்து இருக்கிறான் என

கவிதா சொல்கிறாள். அதற்கு சிநேகா

இது கல்லூரி யார்வேண்டுமானாலும்

வரலாம் என சொல்கிறாள். கௌதம்

யாரிடமும் பேசவில்லை

அமைதியாக இருக்கிறான்.

பக்கத்தில் இருக்கும் ஒருவன்

அவனிடம் என் பெயர் மணிகண்டன்

எல்லோரும் என்னை மணி என

அழைப்பார்கள் என சொல்லி

அறிமுகம் ஆகிறான்.அதற்கு என்

பெயர் கௌதம் என சொல்லி

இவனும் அறிமுகம் ஆகிறான்.

சிநேகா விட்டிற்கு வருகிறாள். தான்

அம்மா இடம் பேசி சிரித்து கொண்டு

இருந்தால் அவளின் அப்பா

வடிவேலன் நல்ல குடித்து விட்டு

தட்டு தடுமாறி வருகிறார் அதை

பார்த்த சிநேகாவின் அம்மா லட்சுமி

இந்த ஆளுக்கு தினமும் இதே

வேலை குடித்து விட்டு வந்து நாம்

உயிரை வாங்குவார்.அதற்கு சிநேகா

சரி விடும் மா இது தெரிந்த விஷயம்

தானே.உள்ளே வந்த வடிவேலன்

என்ன அம்மா இன்னும் நீ தூங்க

வில்லையா ஏய் லட்சுமி இவ்வளவு

நேரம் என் மகள் விழித்து இருந்தாள்

உடம்பு என்னகும் ஆறிவு இருக்காக.

நீ போமா போய் படுத்து தூங்கு.

லட்சுமி சிநேகா போ நான்

வருகிறேன்.சரி அம்மா சீக்கிரம் வா

சண்டை போடாதே அம்மா அவரே

நல்ல குடித்து விட்டு வந்து

இருக்கிறார்.சரி டி போ.ஏய் லட்சுமி

சோறு போடு டி என்ன குழம்பு கறி

குழம்பா இல்ல கருவாடு குழம்பா.

ஆமாம் நீ பெரிய மைசூர் மகாராஜா

உனக்கு கறி குழம்பு கருவாடு குழம்பு

இது தான் இருக்கு திண்ணு ஏய்

என்னாடி ரசத்தை உத்தி இருக்க நீயே

சாப்பிட்டு.நீ தரும் பணத்தில் இதுவே

அதிகம் தான் கொஞ்சம்மாவது

உனக்கு அக்கறை இருக்க

பெண்ணுக்கு கல்யாணம் செய்ய

வேண்டும் அதற்கு ஒரு குண்டு மணி

தங்கம் கூட இல்லை நீ தினமும்

குடிக்கும் பணத்தை வைத்து நாம்

மகளுக்கு தேவையான நகையை

வாங்கலாம் அவளை இன்னும் நல்ல

படிக்க வைக்கலாம் ஒரு பெண்ணை

வைத்து கொண்டு சந்தோசம்

இல்லாமல் அவள் இருக்கிறாள்.

அம்மா வா ம்மா ஏதுக்கு அம்மா

இப்போ சண்டை நான் ரொம்ப

சந்தோசம்மாக தான் இருக்கிறேன்

இப்போ வா வந்து தூங்கு

கவலைப்படாதே அம்மா. கௌதம்

விட்டில் தான் அப்பா இன்று எப்படி

இருந்தது உன் கல்லூரி. நல்ல

இருந்தது அப்பா எனக்கு பக்கத்தில்

இருந்தவன் மணி அவனும் நானும்

நல்ல பழகி விட்டோம் அப்பா.என்

மகன் எங்கு போனாலும்

எல்லோரிடமும் உடனே சேர்ந்து

விடுவன்.அப்படி சொல்லுங்க அம்மா

உன்மகனை விட்டு கொடுக்க

மாட்டியே.அப்பா உங்கா கிட்ட ஒரு

விஷயம் சொல்ல நினைத்தேன்.

என்ன கௌதம் சொல்லு. நான்

நாளை இந்த ஊரைச் சுற்றி பார்க்க

போகிறேன். சரி டா போய் வா புது

ஊர் பார்த்து போய் வா.ஒகே அப்பா.

மாறு நாள் சிநேகா கோவிலுக்கு

போக நினைக்கிறாள் அம்மா நீங்கள்

வாங்க என கூப்பிடுகிறாள். நான் வர

வில்லை நீ போய் வா சிநேகா என

சொல்கிறாள். என்ன அம்மா இப்படி

சொல்றிங்கா. ஆமாம் நான் சமையல்

செய்யவேண்டும் விட்டு வேலை

இருக்கிறது நீ போய் வா.சரி நான்

போய் வருகிறேன் அம்மா. நல்ல

சாமி கூப்பிட்டு வா.சரி என கிளம்பி

விட்டால்.கௌதம் தான் விட்டில்

இருந்து

ஊர்ரை சுற்றி பார்க்க கிளம்புகிறான்

தான் அம்மா, அப்பா இடம் சொல்லி

விட்டு போகலாம் என வருகிறான்

தான் அப்பா பிரபு வா டா கௌதம்

என்ன வெளியில் கிளம்பிட்டியா.

ஆமாம் அப்பா.சரி கௌதம் நீ

என்னை கம்பெனியில் விட்டுட்டு

போ.சரி வாங்க அப்பா.கௌதம் நீ

இன்னும் சாப்பிடவில்லை.நான்

வெளியில் பார்த்து கொள்கிறேன்

அம்மா.சரி கிளம்பு போகலாம்.சரி

வாங்க போகலாம். என கௌதம்

தான் அப்பாவை கம்பெனியில்

விட்டு செல்கிறான். சிநேகா

கோவிலுக்கு போகிறாள்.கௌதம்

இயற்கை கொஞ்சும் அழகை

ரசிக்கிறான் தான் செல்போனில்

போட்டோ எடுக்கிறான் அப்படியே

நடந்து செல்கிறான் சில்லுஎன்று

காற்று விசுகிறாது மலையின் மேல்

நின்றுகொண்டு போட்டோ

எடுக்கிறான் பறவைகள், புதுமைகள்

என எல்லாம் போட்டோ எடுத்து

வருகிறான் பின் அங்கு சாலையில்

இருக்கும் ஒரு கல் மீது உட்கார்ந்து

கொண்டு தான் எடுத்த

போட்டோவை பார்க்கிறான் எல்லாம்

போட்டோவும் நல்ல இருக்கிறது என

நினைத்து கொண்டு பார்க்கும் போது

அந்த போட்டோவில் ஒரு அழகான

பெண்ணை பார்க்கிறான் யார் இது

இவ்வளவு அழகா யார் இந்த பெண்

என நினைத்து கொண்டு எந்த

இடத்தில் இந்த பெண்ணை

போட்டோ எடுத்தோம் அப்போது

நேரம் என்ன என்று பார்க்கிறான் 20

நிமிடம் ஆகிறது என செல்போன்

நேரம் காட்டுகிறது உடனே அவன்

வந்த பாதையில் திரும்பி வருகிறான்

அப்படியே சுற்றி பார்த்து கொண்டே

வருகிறான் அங்கு யாரும் இல்லை

என்ன செய்வது என தெரியாமல்

இருக்கும் நேரத்தில் பக்கத்தில் ஒரு

ஒசை கேட்கிறாது கோவில் மணி

ஒசை சரி அந்த பெண் கோவிலில்

தான் இருப்பால் என நினைத்து

கொண்டு ஒடி வருகிறான்

கோவிலுக்கு உள்ளே போகிறான்

போய் கோவில் நுழைந்து தேடி

பார்க்கிறான் ஆனால் அங்கு அவன்

தேடிய அவள் இல்லை என்ன

செய்வது கடவுளே அவள் யார்

அவளை என் கண்களில் காட்டு

என் மனதில் ஒரு நொடியில்

நுழைந்து விட்டால் கடவுளே என

கௌதம் கடவுள் இடம்

வேண்டினான் பின் கோவிலை சுற்றி

வந்தால் சிறு குழந்தைகள்

விளையாடி கொண்டு இருந்தனர்

அவர்களிடம் பேசி கொண்டு

இருந்தால் அவன் தேடி வந்த அவள்

தான் சிநேகா அவளை பார்ததும்

அப்படியே தன்னைமறந்து நின்று

விட்டான். அவள் அங்கு இருந்து

சென்றால் அவள் பின்னாலே

அவனும் போகிறான் அவள் கோவில்

இருந்து வெளியில் வந்தால்.

அவனும் அவள் பின்னாலே வந்தான்

அவள் திடீரென திரும்பி பார்க்க

உடனே இவன் திரும்பி நின்று

விட்டான் சரி என சிநேகா ஜாலியாக

நடந்து வருகிறாள்.அவள் பின்னாலே

மறைந்து வருகிறான் கௌதம்

திடீரென கௌதம்க்கு தான் பழைய

நண்பர்கள் போன் செய்கின்றனர்

அவன் யார் என போன்னை

எடுத்து பேசிகிறான்.அதற்கு உள்ளே

சிநேகா காணவில்லை எந்த பக்கம்

போனால் என தெரியவில்லை

எப்படி அவளை பார்ப்பது என

நினைத்து கொண்டே விட்டிற்கு

வருகிறான் தான் அம்மா நிற்பது கூட

அவனுக்கு தெரியாவில்லை

கௌதம் என்ன சீக்கிரம் வந்து

விட்டாய் வண்டி எங்கே என அம்மா

கேட்கிறார். அப்போது தான்

அவனுக்கு ஞாபகம் வருகிறது ஐயோ

வண்டி தனியாக நிக்கிறது என ஒடி

வருகிறான்.இவனுக்கு என்ன ஆச்சி

என யோசித்து கொண்டு இருக்கும்

அம்மா. வண்டி எடுத்து கொண்டு

வந்து விட்டன் கௌதம்.என்ன ஆச்சி

கௌதம் என அம்மா கேட்கா.

ஏதுவும் இல்லை அம்மா. என

சொல்லி விட்டு தான் அறைக்கு

வந்து விட்டான் அவளை நினைத்து

கொண்டே இருக்கிறான்.சிநேகா

விட்டிற்கு வந்து விட்டால் தான்

அம்மா இடம் சாமி பிரசாதம்

தருகிறாள் அதை வாங்கி கொண்ட

லட்சுமி. மறு நாள் கௌதம்

கல்லூரிக்கு போகிறான் ஆனால்

அவன் நினைவு எல்லாம் அவள் யார்

அவளை மறுபடியும் எப்படி சந்திப்பது

என யோசித்து கொண்டு இருந்தன்

டேய் கௌதம் என்ன ஆச்சி ரொம்ப

அமைதியாக இருக்க. இல்லை மணி

நான் எப்போதும் போல தான்

இருக்கிறேன்.இல்லை எனக்கு

கொஞ்சம் வித்தியாசமாக தான்

தெரிகிறது.அவன் இருக்கும் காலேஜ்

தான் சிநேகா அவன் கிளாஸ் தான்

ஆனால் அவன் இன்னும் பார்க்க

வில்லை.சிநேகா வருகிறாள்

அவனை தாண்டி தான் அவள் போக

வேண்டும் அவள் தோழி கவிதா. வா

சிநேகா ஏன் இவ்வளவு நேரம் என

கேட்கிறாள்.ஆமாம் கொஞ்சம் நேரம்

ஆகிவிட்டது கவிதா என

சொல்கிறாள் கௌதம் தலை

குனிந்து அவளை பற்றி தான்

நினைக்கிறான் ஆனால் தலை

நிமிர்ந்து அவளை பார்க்க வில்லை.

சிநேகாவிடம் கவிதா வா நாம் போய்

புதிதாய் வந்த கௌதம் இடம்

அறிமுகம் ஆகலாம் என

கூப்பிடுகிறாள் அதற்கு சிநேகா நான்

வர வில்லை நீ போ.சரி நான் போய்

பேசிவிட்டு வருகிறேன் என கவிதா

வருகிறாள் ஹலோ என் பெயர்

கவிதா என சொல்ல கௌதம்

ஹலோ என் பெயர் கௌதம் என

அறிமுகம் ஆகின்றனர் ஒகே நான்

அப்புறம் வருகிறேன் என சொல்லி

விட்டு வந்த கவிதா.சரி என சொன்ன

கௌதம்.மதியம் கௌதம் மணி

இரண்டு பெரும் பேசி கொண்டு

இருந்தனர் மணி இன்று ரிசல்ட்

எங்களுக்கு என சொல்கிறான்

உனக்கு கவலை இல்லை கௌதம்

என சொல்கிறான். ஆமாம் நான்

இப்போதானே வந்து இருக்கிறேன்.


தொடரும்...

எழுதியவர் : தாரா (1-Dec-21, 2:32 pm)
சேர்த்தது : Thara
பார்வை : 114

மேலே