ராசாவே உன்ன நம்பி Episode 01

பல வருடங்கள் கழித்து மீண்டும் கதை கவிதைகள் பதிவிட வந்துள்ளேன் தயவு செய்து ஆதரவு தாருங்கள். முதல் பதிவாக எனது முதல் கதையை தொடர் கதையாக பதிவிடுகிறேன். சில வருடங்களுக்கு முன்பு பதிவிட்டது முழுமையாக இல்லை ஆகவே பல திருத்தங்களுக்கு பின்பு பதிவிடுகிறேன் நன்றி. கருத்துகளை பகிருங்கள்.

எதிர்பாராத காதல், எதிர்பாராத திருமணம், எதிர்பாரத துரோகம், எதிர்பாராத விபத்து, எதிர்பாராத மரணம். மரணத்திற்குப்பின் ஓர் காதல் போராட்டம்

♡♡ராசாவே உன்ன நம்பி♡♡
- திகில் தொடர்-

பகுதி-01


"ராஜ் ராஜ் எழும்புங்க நேரம் ஆகிட்டு" என்று எழுப்பினாள் ராஜேஷின் மனைவி திவ்யா.

"ராஜ் அம்மா அப்பா எல்லாம் எழுந்துட்டாங்க எழும்புங்க"

ராஜ் : "செல்லம் கொஞ்ச நேரம் தூங்குறான்டா ப்ளீஸ்" என்று சொல்லி விட்டு போர்வையால் முகத்தை மூடினான்.
"அம்மா திவ்யா ராஜ் எழும்பிட்டானாமா?" என்று கேட்டாள் ராஜேஷின் அம்மா.

ராஜ் சற்றென்று எழும்பி திவ்யாவின் வாயை கையால் மூடிவிட்டு "அம்மா எழும்பிட்டன் அம்மா" என்று சொல்லி விட்டு ஓடினான் குளியல் அறைக்கு. சிறிது நேரம் கழித்து
ராஜ் : "திவ்யா... திவ்யா...."
திவ்யா : "என்னங்க?"
ராஜ் : "டவல கொஞ்சம் எடுத்து தாடா செல்லம்..!!"
திவ்யா : "போடா எடுத்து தரமாட்டான் என்னடா செய்வ?"
ராஜ் : "என்ன டாவா?"
திவ்யா : "ஆமாடா என்ன செய்வ என்னடா புருஷன எப்படி கூப்பிட்டா உனக்கு என்ன..! போடா"
ராஜ் : "செல்லம் சண்ட போட டைம் இல்லமா டவல கொஞ்சம் கொடுக்கிறியா?"
திவ்யா : "அது"
ராஜ் : "ஹ்ம்ம்ம்ம்ம்ம் இவ தலயோட தங்கச்சி தான"
திவ்யா : "என்ன?"
ராஜ் : "ஒண்ணுமில்லமா ரொம்ப குளிருது சீக்கிரம் தாரியா?"
சின்ன செல்ல சண்டைக்கு பிறகு ஆயத்தம் ஆனார்கள் புது வீட்டுக்கு செல்ல.
ராஜும் அவனுடைய அம்மா அப்பா மனைவி எல்லோரும் வாகனத்தில் ஏறினர். ராஜ் வாகனத்தை ஸ்டார்ட் பண்ணினான் வாகனம் புது வீட்டை நோக்கி சென்றது..

சிறு மணித்தியாலங்களில் புது வீட்டுக்கு வந்தனர். எல்லோரும் வீட்டினுள் நுழைந்தனர். சிறிது நேரத்தில் ராஜின் நண்பர்களும் உறவினர்களும் திவ்யாவின் நண்பிகளும் உறவினர்களும் எல்லோரும் வந்தனர்.
எல்லோரும் புது வீட்டில் பால்பொங்கி சம்பிரதாயங்களில் ஈடுபட்டனர். பிறகு விருந்து சாப்பிட்டுவிட்டு மாலைநேரம் ஆனதும் சந்தோசமாக எல்லாரும் விடை பெற்றனர்.
இரவானது எல்லோரும் அவரவர் அறைக்கு சென்றனர். ராஜ் மட்டும் சோபாவில் இருந்து கொண்டு லப்டப்இல் என்னவோ செய்து கொண்டிருந்தான்.

திவ்யா : "ராஜ் நேரம் ஆகிட்டு தூங்கலையா?"
ராஜ் : "செல்லம் சின்ன வேல இருக்குமா ஈமெயில் ஒன்னு அனுப்பனும் நீ போய் தூங்கு நான் வாறன்"
திவ்யா : "சரி சீக்கிரம் வாங்க"
ராஜ் : "ம்ம்ம்ம் சரி"
திவ்யா அறைக்குச் சென்று கட்டிலில் சாய்ந்துகொண்டிருந்தாள் அப்படியே சில நொடியில் உறங்கி விட்டாள். சிறுது நேரம் கழித்து ராஜ் அறைக்குள் வந்தான் திவ்யாவை சரியாக கட்டிலில் உறங்க வைத்து தலையனையை அவளின் தலையின் கீழ் வைத்துவிட்டு அவனும் உறங்கினான்.
இருவரும் உறங்குவதை பார்த்து கொண்டிருந்தது ஒரு கறுப்பு உருவம் அறையின் ஜன்னலின் பின்னாடி இருந்து..


தொடரும் ...

எழுதியவர் : றபீஸ் முஹமட் (1-Dec-21, 4:20 pm)
சேர்த்தது : றபீஸ் முஹமட்
பார்வை : 286

மேலே