உப்புமா இங்க வாம்மா
என்னங்க தாத்தா உப்புமாவக் கூப்படறீங்க? உங்க வீட்டில செய்யற உப்புமாவுக்கு காலு கையு மொளச்சிருச்சா?
இல்ல உப்புமா நாயுப் பேரா பூனைப் பேரா?
#######
யாரும்மா நீ? அடையாளமே தெரியலயே! ஊருக்குப் புதுசா?
@@@@@@@
என்ன தாத்தா என்னை மறந்தீங்களா? உங்க பங்காளி குச்சிக்காலுத் தாத்தாவோட பேத்தி சவ்மியா?
#######
அட, கல்யாணம் பண்ணீட்டு அமெரிக்கா போன குச்சிக்காலன் பேத்தி சவ்வுமியாவா? கண்ணு மங்கலா இருக்குது கண்ணு.
#######
அது சரிங்க தாத்தா உப்புமா யாரு?
########
யாரா? எம் பேரன் ஈசுவரோட பொண்ணுதான் உப்புமா.
@@##@###
அது என்ன 'உப்புமா'னு பேரு வச்சிருக்கிறாங்க?
########@
"சுவீட்டான இந்திப் பேருனு ஈசுவரு சொன்னாம்மா. அழகான பேராம். நல்ல அர்த்தம் இருக்குதுன்னு சொன்னான்.
#######
இந்த மாதிரி போரை நான் கேள்விப்பட்டதில்லையே!
######
அவஞ் சொன்னான், "நம்ம தமிழர்கள் யாருமே வைக்காத பேரு 'உப்புமா' சொன்னான். நம்ம ஊரு சனங்களும் "உப்புமா இந்திப் பேரா இருந்தா சுவீட்டு நேம்மா இருக்கும்னு" சொன்னாங்க சவ்வுமியா.