ஊட்டி ஓனர், டூட்டி ட்ரைவர்
ஊட்டி ஓனர்: அஞ்சு மணிக்கு வான்னா, ஆறு மணிக்கு வந்து நிக்கிறியே?
டூட்டி ட்ரைவர்: ஐயா, நான் நிக்கலீங்க. வண்டீலதான் உக்காந்திருக்கேன்.
ஊட்டி ஓனர்: நாளைக்கு ஊட்டில வேலை இருக்கு.
டூட்டி ட்ரைவர்: எனக்கு அங்கே வேலை ஒன்னும் இல்லை ஐயா.
ஊட்டி ஓனர்: உனக்கு இல்ல, எனக்கு வேலை இருக்கு அங்கே. நேரத்தோடு வந்து வண்டியை எடு.
ஊட்டி ஓனர்: போகும்போது அந்த காந்தி சிக்கனல்கிட்ட ரெண்டு நிமிஷம் நிறுத்து.
டூட்டி ட்ரைவர்: அய்யா, காந்தி டிராபிக் சிக்கனல்ல 90 செகண்ட்தான் நிப்பாட்ட முடியும்.
ஊட்டி ஓனர்: காருல ஏறினால் குப்புன்னு சாராய வாசனை வருது.
டூட்டி ட்ரைவர்: இந்த ஊட்டில குடிக்கிறவங்க ஜாஸ்தி ஐயா.
ஊட்டி ஓனர்: யோவ், நம்ம காருக்குள்ளேதான் இந்த வாடை வருது.
ஊட்டி ஓனர்: சாந்திகிட்ட கூட்டிப்போப்பா.
டூட்டி ட்ரைவர்: ஐயா, இந்த வயசுல எதுக்கு உங்களுக்கு அதெல்லாம்?
ஊட்டி ஓனர்: யோவ், நான் சொன்னது சாந்தி தியேட்டர்கிட்ட கூட்டிப்போன்னு.
ஊட்டி ஓனர்: அதெப்படிப்பா ரெண்டு வீலும் ஒரே நேரத்தில பஞ்சர் ஆகும்.
டூட்டி ட்ரைவர்: ஒரு கல்லுல ரெண்டு மாங்கா விழலாம்னா, ஒரே நேரத்தில ரெண்டு வீலு எங்க பஞ்சர் ஆகக்கூடாது?
ஊட்டி ஓனர்: ட்ரைவர், அங்கே டிராபிக் கான்ஸ்டபிள் இருக்காரு. கொஞ்சம் வண்டியை இங்கேயே ஓடிச்சுக்கோ. என்கிட்டே டிரைவிங் லைசன்ஸ் இல்ல.
டூட்டி ட்ரைவர்: காரை நான்தான் ஐயா ஓட்டுகிறேன். என்னுடைய லைசென்ஸே எக்ஸ்பியரி ஆயிடிச்சு. நானே பயப்படலே. அப்புறம் உங்களுக்கு எதுக்கு பயம்?
ஊட்டி ஓனர்: ???
ஊட்டி ஓனர்: ஏம்பா ட்ரைவர் சாமி, நீ ஏன் ஐம்பது கிமீ ஸ்பீடுக்கு மேல ஓட்டமாட்டேங்குறே. உன்னால எனக்கு ரொம்ப நேரம் வீணாகுது.
டூட்டி ட்ரைவர்: நான் என்ன பண்ண சாமி. எனக்கு வயசு அம்பது. வயசுக்கு தகுந்த ஓட்டம் இருக்கணும்னு எனக்கு பள்ளியில ஒரு வாத்தியார் சொன்னாரு.