சுகர்வால்

ஏன்டா கொள்ளுப்பேரா யோகேசு...
####
என்னங்க பாட்டிம்மா?
########
இந்த மாநகரத்தில உன்னைவிட அழகான பையன் யாருமில்லை. என்ற வயசு தொண்ணூறு. என் வயசுல நம்ம பாரி நகரில இருபது பேரு இருக்இருக்குறாங்களாம். இந்த இருபது பேருல ஒருத்தரு பேருகூட நம்ம தமிழ்ப் பேரு இல்லை. எம் பேரு கோமதி. உனக்குத் தெரியும். எம் பாட்டி தாத்தா பேரும் இந்தி பேருங்கதான். உம் பேரு, உங்கப்பன், அம்மா, பேருங்களும், உந் தாத்தன் பாட்டி பேரும் இந்திப் பேரு.
#######
இதையெல்லாம் எதுக்கு சொல்லறீங்க?
#######
உன்ற பேரு யோகேசு. நம்ம தமிழ்நாட்டிலயே பத்தாயிரம் பேரோட பேராவது யோகேசா இருக்கும்.
######
அதானல....?
######
உலகத்தில உள்ள தமிழர்கள்ல யாருமே அவுங்க பிள்ளைங்களுக்கு வைக்காத
இந்திப் பேரா உனக்கு இருந்தா நல்லா இருக்கும். அந்தப் பேரை வச்சுகிட்டு நீ சினிவில நடிச்சா பெரிய சூப்பரு இஸ்டாரு ஆகிடுவே. என்னடா சொல்லற?
######
சரி நீங்களே உங்களுக்குப் பிடிச்ச இந்திப் பேரை எனக்கு வச்சுடுங்க. என்னோட வழக்குரை மாமாகிட்டச் சொல்லி அந்தப் பேரை அரசிதழில் வெளியிட்டு அதிகாரப் பூர்வமா எம் பேரை மாத்திக்கிறேன்.
########
இந்திக்காரங்க இந்த 'அகர்வால்', அந்த 'அகர்வால்'னு எத்தனையோ அகர்வாலுங்க இருக்குறாங்க. ஆனா 'சுகர்வால்'ங்கற பேருல இந்திக்காரங்க யாரும் இல்லை. தமிழர்கள் யாரும் அந்தப் பேருல இல்லை. அதனால..
#####
அதனால?
########
நாளையிலிருந்து நான் உன்ன 'சுகர்வால்'னுதான் கூப்புடுவேன். நீ பாக்கறதுக்கு அழகான இந்திக்காரப் பையன் மாதிரி இருக்கிற. இந்தியை நல்லாப் படிச்சு இந்திக்காரங்க மாதிரியே இந்தி பேசற.
######
ஆமாம் பாட்டிம்மா, தமிழ் திரைப்படங்களிலும் தொலைக்காட்சி தொடர்களிலயும் தமிழில் பேசத் தெரியாதவங்களுக்குத் தான் நடிக்க அதிக வாய்ப்புத் தர்றாங்க. நான் பம்பாயிலிருந்து சென்னைக்கு வந்து ஒரு மாசந்தான் ஆகுதுன்னு இந்தியிலயும் ஆங்கிலத்திலயும் பேசினாப் போதும். நான் (இ)லட்ணமா இந்திக்கார இளைஞன் மாதிரி இருக்கிறதனாலயும் இந்திய சரளமா இந்திக்காரங்க மாதிரி பேசறதனாலயும் இயக்குனர் ஷங்கரே எனக்கு கதாநாயகனா நடிக்க வாய்ப்புத் தருவாரு. முதல் படமே வெள்ளி விழா. வசூல் வேட்டையாடும்.
######
நல்வதுடா பேரா. மகராசனா இருடா.
■■■■■■■■■■■■■■■◆■◆◆■◆◆◆◆
முடிந்தவரை திரைத் தமிழைத் தவிர்ப்போம்.
●●●●●●●●●●●●●●●●●●●●●●●●
Yogesh = Lord of Yoga

எழுதியவர் : மலர் (29-Nov-21, 10:51 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 67

மேலே