சுமையேத்து

ஏங்க பெரியம்மா வெளிநாட்டில இருக்கிற மகளுக்கு ஆண் கொழந்தை பொறந்திருக்கிறதா கேள்விப்பட்டேன். உங்க மகளும் பேரனும் நல்லா இருக்கிறாங்களா?
#########
இருக்கிறாங்கடி முல்லை.
######
சந்தோசம் பெரியம்மா. பையனுக்கு பேரு வச்சுட்டாங்களா?######
உம். வெச்சுட்டாங்களாம்

########
தமிழ்ப் பேரா, இந்திப் பேரா?
########
நம்ம நாட்டில இருக்கிற தமிழ் மக்களே தமிழ்ப் பேருங்கள அவுங்க பிள்ளைங்களுக்கு வைக்கிறதில்லை. வெளிநாட்டில வாழற தமிழர்கள்ல பெரும்பாலானவங்க அவுங்க பிள்ளைகளைக்கு இந்திப் பேருங்களத்தானே வைக்கறாங்க!
#######
அதுவும் சரிதான். சரி. பேரன் பேரைச் சொல்லுங்க?
########
செல்லுப்போனுல சொல்லறபோது என்னமோ 'சுமையேத்து, சுமையேத்து'-னு சொன்னாங்கடி. அது என்ன பேரே நான் என்னத்தைடி கண்டேன்.
#######
நானும் இதுவரைக்கும் இந்தப் பேரைக் கேள்விப்பட்டதில்லங்க பெரியம்மா.
##$$$####
Sumedh = Clever (Adjective). Masculine name

எழுதியவர் : மலர் (28-Nov-21, 11:03 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 88

மேலே