பூருவா

பூருவா, பூருவா?
#######
யாரு, யாரைப் பூருவா?
#########
பூருவா, பூருவா?
####$####
ஏம் பாட்டி உங்களத்தான் கேக்கறேன்? யாரு,யாரைப் பூருவா?
#########
அடியே கூருகெட்டவளே. உன்னத்தான்டி பூருவா நீ அவ பேரப் பழிச்சுக்காட்டுனா?
#######
யாரு பேரை?
######
பூருவா பேரை!
######
எதுக்கு?
$##$$####
நான் எத்தனை தடவை சொல்லறது?
#####$##
ஓ.... 'பூருவா'-ங்கிறது பேரா?
$#########
ஆமான்டி. எம் பேத்தியோட பேருதான்டி பூருவா?
######
ஓ..... உங்க பேத்தி பேரு இந்திப் பேரு 'பூர்வா' -வா?
####$##
ஆமான்டி கோணவாயிக்காரி.
#######
என்னங்க பாட்டி புதுசு புசா என்னைக் கோணவாயிக்காரி-னு சொல்லறீங்க.
######
சனியன். வாய் தவறிச் சொல்லிட்டீன்டி. ஒரு தொல்லைக் காட்சித் தொடர்ல ஒரு பெருந்தீனி குண்டுப் பொம்பள தன்னோட தம்பி மகளை அவ இல்லாதபோது அவ பேரைச் சொல்லமா "அந்தக் கோணவாய்க்காரி"னு சொல்லும்டி.
########
ஓ.... ஓ அந்தச் சவ்வுத் தொடரா?
########
ஆமான்டி சவ்வு மாதிரி இழுத்துட்டே போறாங்கடி.
########
அதுகெடக்கடக்கட்டும். கோவம் வந்தா உங்க பேத்தி என்ன செய்வா?
#######
பூருவா பூருவா. பூரிவிடுவாடி.

இதோ பாரு எங் கையை. அவ பூரிவிட்ட தழும்புகளையும் கோடுகளையும்.

போயும் போயும் எம் மவனும் மருமகளும் என்னோட அழகான பேத்திக்கு 'பூருவா' -னா இந்திப் பேரை வச்சிட்டாங்களே. பூருவா. பூருவா. நல்ல பேரு வச்சாங்கடி. இந்திப் பேரு.
@@@@@@@
சரிங்க பாட்டிம்மா. நான் வர்றேன். உங்க "பூருவா வந்தா என்னைப் பூரிவிட்றப் போறா!
■■■■■■■■■■■■■◆◆■■■■■■■■■
Purva = Elder, East, Breeze இன்டியாசைல்ட்நேம்ஸ்டாட்காம்

எழுதியவர் : மலர் (28-Nov-21, 2:42 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 82

மேலே