கண்கள் இருண்டால்

பக்கம் 14 :


தமிழ்நாட்டில் உள்ள மிகப்பெரிய அரசியல்வாதிகள் எல்லாம் மறைமுகமாக சந்தித்துக்கொள்ளும் அது. பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் இயங்கி கொண்டு இருந்தது
அந்த நட்சத்திர ஹோட்டல் .

" என்னய்யா ரங்கா புதிய கட்சியை ஆரம்பித்து விட்டான். இதனால நமக்கு பல பிரச்சினைகள் வரப்போகிறது இதுவரை அவனிடம் இருந்து ரூபாயை பெற்றுக் கொள்வோம் எல்லா செலவையும் அவனை பார்த்துக் கொண்டான் ஆனால் அவன் சொந்த மகளையே அரசியலில் இறக்கி விட்டான். இனி நமக்கு பணம் கொடுக்கமாட்டான். அவன் அரசியலுக்கு வந்தால் நமக்கு ஆபத்து தான்.இதுவரை நம்மை நோக்கி வந்தவன் இனிமேல் நாம் அவனை நோக்கி நாம் செல்ல வேண்டிய நிலை ஏற்படும். எதுவாக இருந்தாலும் எப்படியாவது அவனை அரசியலுக்கு வரவிடாமல் தடுத்து விட தேவையானவற்றை செய்ய வேண்டும் " என அரசியல்வாதி ஒருவர் அந்த கூட்டத்தில் குரலெழுப்ப

எல்லோரும் ஒரு குரலாய் " ஆமாம் தலைவரே அவனை அரசியலுக்குள் விட கூடாது என சத்தமிட்டனர். ஒருசில மனதிற்குள் நாம் ஏன் அந்த கட்சியில் போய் சேர்ந்து நாமும் லாபம் பார்க்கக் கூடாது எனவும் நினைத்துக் கொண்டார்கள் எல்லாவற்றிற்கும் சரியான காலம் வர வேண்டும் அதுவரை பொறுத்திருப்போம் என மனதிற்குள் நினைத்துக் கொண்டார்கள் சில அரசியல்வாதிகள்.

மிகப்பெரிய பங்களாவில் ஆடம்பரமாய் வளர்க்கப்பட்ட ரங்காவின் மகள் வள்ளி தன்னை அந்த நாட்டை ஆள பிறந்த அந்த காலத்து ராணி போல நினைத்துக்கொண்டு மனக் கற்பனையில் மிதந்து கொண்டிருந்தார் தொலைபேசி அடித்தது..
மறுமுனையில் வள்ளியின் தோழி கலா "ஹாய் எப்படி இருக்க?"நம் எங்காவது வெளியில போயிட்டு வரலாமா? என்று கேட்க

வெளியில் எங்கும் செல்லக்கூடாது என அப்பா கண்டிப்பாகச் சொல்லி விட்டார் இனி அவரது அனுமதி இல்லாமல் எங்கும் செல்லக்கூடாது என்றும் மேலும் எங்கு சென்றாலும் எனக்குப் பாதுகாப்பாக குறைந்தபட்சம் 20 காவலர்கள் என்னோடு வந்து கொண்டுதான் இருப்பார்கள். எல்லாவற்றையும் அப்பா ஏற்பாடு செய்துவிட்டார்


சிலவற்றை நாம் தவிர்த்துத்தான் ஆக வேண்டும் முன்புபோல் நாம் வெளிப்படையாக வெளியுலகத்தில் நடமாட முடியாது நாம் அரசியலில் இறங்கி விட்டோம் இனி நமக்கு எந்தப் பக்கத்திலும் இருந்து எதிரிகளின் தொல்லை வரலாம் அதனால் நம்மை நாம் பாதுகாத்துக் கொள்வது மிக அவசியம் கண்டிப்பாக சொல்லிவிட்டார்.

சரி நீ வேண்டுமானால் இங்கு வா நாம் பார்த்து ரொம்ப நாள் ஆகுது என்று சொல்லிவிட்டு போனை வைத்தாள் வள்ளி..

இன்னும் ஐந்து மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் வரப்போகிறது நிச்சயம் அதற்கான வேலையை சரியாக செய்து இந்த முறை ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என மிக உறுதியாக இருந்தார் ரங்கா. அந்த மிகப்பெரிய தொழிலதிபர் மூத்த அரசியல்வாதிகளில் பலர் ,அரசு அலுவலகங்களில் இவரிடமிருந்து மாதம் மாதம் மறைமுக சம்பளம் வாங்கும் ஊழியர்கள் பல என முக்கியமான இடங்களில் எல்லாவற்றுக்கும் ஆட்களை சம்பாரித்து வைத்திருந்தார் ரங்கா . அதனால் அவரால் உறுதியாக சொல்ல முடிகிறது பணம் மட்டும் சரியாக மக்களிடம் சென்று விட்டால் இந்த முறை கண்டிப்பாக நாம் அனைவரும் வாக்குகளையும் வாங்கிவிடலாம். அதுபோக மற்ற கட்சிகளை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி ஆட்சியை பிடித்து விடலாம் என்ற திட்டத்தில் மிக உறுதியாக இருந்தார் ரங்கா ..

டாக்டர் சரவணன் கொடுத்த புத்தகங்களை எடுத்து படித்துக் கொண்டிருந்தான் அனைத்தும் ஒன்றை மட்டும் தான் மையப்படுத்திதான் அதுதான் மனிதனின் கண்கள். அந்த பத்து புத்தகங்களையும் கிட்டத்தட்ட எல்லாவற்றிலும் கருத்து ஒன்று தான் ஆனால் அது வேறு வகையில் சொல்லப்பட்டிருந்தது மனிதனின் கண்களில் எவ்வாறாக கையாள வேண்டும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்பதுதான் கருத்து . எல்லா புத்தகங்களும் அதை தான் திரும்பத் திரும்ப சொல்லிருந்தன . நான் ஏன் கண்கள் சம்பத்தப்பட்ட துறைக்கு போகணும் எனக்கு இதய சிகிக்சை வல்லுநர் ஆகவேண்டும் என்பது தான் இலக்கு என இவனுக்கு மனதில் ஒரு கேள்வி எழுந்தாலும் அதை கேட்கும் தைரியம் இவனிடம் இல்லை..

காரணம் சிறுவயதிலிருந்து பள்ளி பருவத்தில் இருந்து எல்லா செலவுகளையும் கவனித்துக் கொள்பவர் டாக்டர் சரவணன் கிராமத்து ஆசிரமத்தில் இருந்தாலும் மாதத்திற்கு ஒருமுறையாவது தவறாமல் வந்து எல்லா குழந்தைகளுக்கும் தேவையான வசதிகளை உதவிகளையும் செய்து தருவார். ரித்திக் மீது அளவு கடந்த அன்பு கொண்டவர் தன் மகனைப் போல பார்த்து பார்த்து வளர்த்தவர் படிப்பு செலவு உட்பட எல்லாருக்கும் உதவி செய்தவர் அதனால் அவரிடம் போய் நான் என் கண்கள் மட்டும் சம்பந்தப்பட்ட மருத்துவம் பார்க்க வேண்டும் என கேள்வி கேக்கும் அளவிற்கு தைரியம் வரவில்லை .இப்போது கேட்க முடியாது சரி போகட்டும் பார்த்துக்கொள்ளலாம் என டாக்டர் சரவணன் சொல்வது சரியோ தவறோ நாம் செய்தாக வேண்டும் என்பது மட்டும் அவன் மனதில் உறுதியாக இருந்தது.

ரித்திக் செல்போன் ஒலித்தது மறுமுறையும் மறுமுனையில் பவித்ரா..

" ஐயா என்ன பண்ணிக்கொண்டு இருக்கிறீர்கள்? "

"டாக்டர் சரவணன் சில புத்தகங்களை கொடுத்தார் அதை படித்துக் கொண்டிருக்கிறேன் "

"அவருக்கும் உனக்கும் வேற வேலையே கிடையாது "என நக்கலாக பேசியவள்

"சரி வேலை எல்லாம் எப்படி போகுது சார்"

" எனக்கு அது அப்படியேதான் போகிறது மேடம்"

என ரித்திக் சொல்ல வழக்கமான அவர்களது உரையாடல் தொடங்கியது நான் கோயம்புத்தூர்ல இருக்கேன் அங்க எப்படி இருக்கு? "

" நல்ல இருக்கேன் ..நோயாளிகள் எல்லாம் பார்க்க ஆரம்பித்து விட்டாயா? எனக் கேட்க


"ஆமா எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை நான் இப்பொழுது வெளி நோயாளிகளை கவனித்து கொண்டு வருகிறேன் . இரண்டு அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள் கொண்ட அணியில் நானும் இருக்கிறேன் எனக்கு நன்றாக தான் போகிறது நாம் புத்தகத்தில் படிப்பதற்கும் நேரில் நோயாளிகளை பார்ப்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது இப்பத்தான் எனக்கு கொஞ்சம் கொஞ்சம் புரிகிறது . விரைவில் நல்ல மருத்துவர் ஆகி விடுவேன் என்ற நம்பிக்கை உள்ளது .அடுத்த மாதம் டெல்லி போவேன் என நினைக்கிறேன்" என்று பவித்ராவை சொல்ல ..
எதற்கு என சரவணன் கேட்க...

எனது குடும்பத்தினரை பார்த்து ரொம்ப நாள் ஆகிறது அதனால் அதனால் அவர்களைப் பார்க்க வருவது செல்கிறேன் என பவித்ரா கூறிவிட்டு
" அது சரி நீ எப்போது உன் குடும்பத்தை பார்க்கப் போகிறார்" என கேட்டு விட்டாள்

ஒரு நிமிட மௌனத்திற்கு பிறகு ..

" சாரி என்னை மன்னித்துவிடு நான் கவனமில்லாமல் பேசி விட்டேன் என பவித்ரா சொல்ல"...

"இல்லை பரவாயில்லை நீ சொன்னது சரிதான் எனக்கு குடும்பம் என்றால் அந்த ஆசிரமம் தான் நிச்சயம் அதைப்போல் கவனிக்க வேண்டும். அங்கு இருக்கும் குழந்தைகளுக்கு உதவி செய்ய வேண்டும் அப்போதுதான் எதிர்காலத்தில் அவர்களும் அடுத்து வரும் குழந்தைகளுக்கு உதவி செய்ய மனம் வரும் நிச்சயம் அதை செய்யவேண்டும் .ஆனால் இப்போதைக்கு நான் அங்கு போவதாக இல்லை. போன வாரம் கூட ஃபாதர் பேசினார் எனக்கு வேலை கிடைத்தது பற்றி அவரிடம் பேசினேன் மிகுந்த மகிழ்ச்சி கொண்டார். எல்லாவற்றுக்கும் டாக்டர் சரவணன் தான் முக்கிய காரணம் அவரது மட்டும் இல்லை என்றால் எதுவும் சாத்தியமாகி இருக்காது அதனால் அவர் சொல்வதைக் கேட்டு இருக்குமாறும் அறிவுரை கூறினார் என பதில் சொல்ல "


"சரி எனக்கு நேரமாகிறது நான் அப்புறம் கால் பண்ணுகிறேன்" என்று சொல்லிவிட்டு இணைப்பைத் துண்டித்துவிட்டு மருத்துவமனைக்கு வந்த நோயாளிகளைக் கவனிக்க தொடங்கினாள் பவித்ரா.


விலை உயர்ந்த ஆடைகளை அணிந்து கொண்டு பணக்காரர்கள் கூறிய மிடுக்கான தோற்றத்தில் இருந்தார் ரங்கா.
மேனேஜர் வந்தார் "ஐயா எல்லாம் ரெடியாகிவிட்டது கிளம்பலாமா? எனக்கேட்க ..

" ஓகே போகலாம்" என்று சொல்லிவிட்டு தனது அறையில் இருந்து வெளியே கிளம்ப கிளம்பினார் ரங்கா அந்த நேரத்தில் வள்ளியின் தோழி காலா காரிலிருந்து வந்து இறங்கினாள்.
"ஹாய் அங்கிள் ஹவ் ஆர் யூ ?"

"ஐ அம் ஃபைன் " என சிரித்த முகத்தோடு வள்ளி மேலேதான் இருக்கிறார் போய் பார்த்துக்கொள் ஏன் நீ அடிக்கடி வீட்டிற்கு வர வேண்டியதுதானே பார்த்து ரொம்ப நாள் ஆகிறது என ரங்கா கேட்க

" நிறைய வேலை அங்கிள் . அப்பாவுக்கு பிசினஸ் உதவியாக இருந்தேன் அதனால தான் வர முடியவில்லை"
" சரி மா ..நன் கிளம்புறேன் எனக்கு தடவை ஆகிருச்சு டோன்ட் மைண்ட் "
" ஓல் அங்கிள் பை "
ரங்கா காரில் ஏறினார் கார் கிளம்பியது.

வா!! கலா பார்த்து ரொம்ப நாளாச்சு அப்புறம் ஏதும் விசேசங்களில் இருக்கிறதா என வழக்கமான உரையாடல்களை தொடர்ந்து கொண்டனர் தோழிகள் இருவரும்.
உண்மையில் கலாமும் வள்ளிக்கு நிகரான பணக்காரி அவரது தந்தையின் ரங்கா போல மிகப்பெரிய தொழிலதிபர் தான்.
இவர்கள் இருவருக்கும் கல்லூரி காலங்களில் நட்பு கிடைத்தன ..

கிட்டத்தட்ட வள்ளிக்கும் களவிற்கும் விருப்பங்கள் எண்ணங்கள் எல்லாம் ஒன்றுக்கொன்று புரிந்து கொள்பவையாக இருந்தனர் அதனால் தான் அவர்கள் இன்றளவும் நண்பர்களாக இருக்கிறார்கள்ஒ.ரே ஒரு வித்தியாசம் மட்டும்தான் கலா அதிகம் கோபப்பட மாட்டாள் .வள்ளி அதிகம் கோபப்படுவார்கள் ஒரு பணக்காரி என்ற எண்ணம் எப்பொழுதும் அமர்க்களமாய் இருக்கும் மற்றவர்கள் மதிப்பதில்லை ஆனால் இதிலிருந்து சற்று வித்தியாசம் பட்டவள் கலா .

வழக்கமான உரையாடல்கள் இருவருக்கும் இடையே இனிதாக சென்று கொண்டிருக்க தொலைபேசி ஒலித்தது.

வள்ளி தொலைபேசியை எடுத்தாள்

மறுமுனையில் மேனேஜர் " அம்மா ஐயா வந்த கார் விபத்தாகிவிட்டது ..உடனே அபில்லோ மருத்துவமனைக்கு வாங்க " என சொல்ல

கண்கள் குளமாகி நீண்ட நாள்பிறகு சத்தமிட்டு அழுதாள் வள்ளி ....
கண்கள் திறக்கும்
பக்கம் 15 ஆக....

பொ. சசி குமார்
27 .11 .2021

எழுதியவர் : சசி kumar (27-Nov-21, 8:27 pm)
சேர்த்தது : சசி குமார்
பார்வை : 652

மேலே