சஞ்சை பஞ்சை

ஆத்தா மூத்த பையனுக்கு சஞ்சைனு பேரு வச்சோம். அவன் பிறந்த நேரம், நாள், ராசி, நச்சத்திரம் லக்கினப்படி நம்ம வாழ்க்கை வெற்றிகரமா இருக்கும்னு நம்ம குடும்ப சோசியர் சோதிலிங்கம் சொன்னனாரு. அவுரு சொன்ன மாதிரியே இந்த மழை காலத்திலும் ஆண்டவன் புண்ணியத்தில நம்ம காய்கறித் தோட்டத்தில நல்ல விளைச்சல். கிலோ பத்து ரூவா பதினஞ்சு ரூவாய்க்கு வித்த தக்காளி இன்னிக்கு நூத்திருபது ரூபாய்க்கு விக்குது. வழக்கமா நம்மகிட்ட காய்கறி வாங்கற மொத்த வியாபாரி ஆயிரம் கிலோ தக்காளியை எண்பதாயிரத்துக்கு வாங்கி ட்டாரு. அதே மாதிரி கத்திரிக்காயை வித்ததில ஒண்ணரை லட்சம் கெடச்சது. எல்லாச் செலவும் போக இந்த போகத்தில மொத்தமா அஞ்சு லட்சம் லாவம் கெடச்சது. எல்லாம் என்னோட மூத்த பையன் சஞ்சையோட ராசி. இப்ப முத்துமணிக்கு பையன் பொறந்தா மூணு நாளு ஆகுது. அவுனுக்கு ஒரு நல்ல இந்திப் பேராச் சொல்லுங்க ஆத்தா.
@@@@@@ மகனே மாரியப்பா, நம்ம ஊரிலயே என்னதான் ரொமப ராசிக்காரினு சொல்லுவாங்க. மூத்த பையன் 'சஞ்சை'னா, ரண்டாவது பையனுக்கும் அதே மாதிரி இந்திப் பேரைத்தான் வைக்கணும். அவனுக்கு 'பஞ்சை'-னு வையுடா. யோசாக்காத. அவனும் மூத்த பையன் மாதிரியே ரொம்ப ரொம்ப ராசிக்காரனா இருப்பான்டா மாரி.
########
ஆத்தா, ஆத்தா நீ தான் நாங் கும்படற கண் கண்ட தெய்வம். 'பஞ்சை' அருமையான பேரு ஆத்தா.
########
"என்னடா மாரி ரண்டாவது பையனுக்கு 'பஞ்சை'னு பேரு வச்சிருக்கிறயே"னு கேட்டா .... 'பஞ்சை' அருமையான இந்திப் பேருங்கனு சொல்லிடு. அவுங்க "அட்டா நம்ம ஊரில யாருமே வைக்காத அருமையான இந்திப் பேரு. சூவீட் நேம்"னு சொல்லி உன்னையும் அந்தப் பேரை வச்ச என்னையும் பாராட்டிக் கொண்டாடுவாங்கடா.
#######
ரொம்ப நன்றி ஆத்தா.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
இந்திப் பெயர் மோகம்
தமிழர்களின் தீராத தாகம்.
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
Sanjay = Victorious (adjective)