மானமில்லை

கூனல் வஞ்சி

கலக்கமின்றிய வரும் மலையில்
உயிரும்பண யமாம்பனி. நடு
உணவின்றிநிற் பவர்குடி தொலை
நிலையறிவிலி குடி கும்மாளம்


பனிமலை பணி புரியும் வீரனின் வீடோ தொலைதூரக் கன்யாகுமரி ஆனால் இங்கோ
எல்லைப் பாதுகாப்பு பற்றி அறியாத அறிவிலி கட்சியின் செத்தக் கிழத்தலைவர்களின்
பிறந்தநாள் கவனமாகக் கொண்டாடி குடித்து கும்மாளம் போடுகிறார்


சவலை வெண்பா

எல்லை பணிக்கு இமயத்தின் உச்சிமீது
தொல்லைநீங்க ஏந்துகின்றார் துப்பாக்கி
சண்டாளக் கும்பலுடன் கட்சி கிழமோ பிறந்தநாள்
கொண்டாடித் தின்னுங் குடித்து


இமயத்தின் பனிமலையில் இந்திய எல்லையில் சொற்ப உணவு உண்டு
பாதுகாவல் பணிக்காக உயிரையேத் தியாகம் செய்துகொண்டு நிற்கும் வீரர் பற்றி
என்றாவது தமிழ்நாட்டு கட்சியும் கழகமும் பேசியதோ பாராட்டியதோ இன்றுவரைக்
கிடையாது. அவர்கள் பேசுவதோ தமிழ் தமிழ் தமிழன் இலங்கைத் thamizhs பற்றியே.
உண்மையில் இந்த அரசியல் தலைகள் வெளிமாநில மக்களே. எதைப் பற்றியும்
கவலைப்படாத இந்த கிழங்களுக்கு பிறந்தநாள் கொண்டாடுவது எதற்கு. மானங் கெட்ட
அடிவருடிகள்

எழுதியவர் : பழனி ராஜன் (3-Dec-21, 8:57 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 71

மேலே