மூடநம்பிக்கை

சுட்டெரிக்கும்
சூரியக் கண்களை
சில கணங்கள்
கட்டி வைத்து விளையாடுகிறது
சுட்டி நிலா...!!!
அக்கணத்தைப் பயன்படுத்தியே
காலங்காலமாய் - நம்
சுடர்விடும் அறிவுக்கண்களை
சுற்றி வந்து முடிச்சிடுகிறது
மூடநம்பிக்கையெனும்
முட்டாள் நிலா...!!!

எழுதியவர் : விஷ்ணுதீப் (4-Dec-21, 8:03 pm)
சேர்த்தது : Vishnudeep B
Tanglish : moodanambikkai
பார்வை : 31

மேலே