கொளுஞ்சி நாரத்தங்காய் - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

சொல்லுங் கொளுஞ்சிக்காய் தோன்றுகின்ற காசத்தை
வல்லவுள் சீதத்தை மாருதத்தைப் - பொல்லாத
ஐயத்தைத் தாகத்தை அப்பொழுதே நீக்கிவிடும்
வையத்துட் பெண்ணரசே வாழ்த்து

- பதார்த்த குண சிந்தாமணி

இருமல், ஆமதோடம், வாத விரணம், கபம், தாகம், இவற்றை நீக்கி விடும் இயல்பு கொடி நாரத்தை எலுமிச்சை என்றும் துரிஞ்சி என்றழைக்கப்படும் கொளுஞ்சி நாரத்தைக்கு உண்டு

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (5-Dec-21, 11:17 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 12

மேலே