கொசுஉள்ளான் கறி - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
கொசுஉள்ளான் றன்கறியைக் கூட்டியுண் பார்க்குப்
பசியெழும்பும் மேகம் பறக்கும் - பசபசத்து
நின்ற தினவகலும் நீங்காத போகமுறும்
மன்றலுறை வார்குழலே வாழ்த்து
- பதார்த்த குண சிந்தாமணி
இதனையுண்டால் மிகுந்த பசி, போகம் இவை உண்டாகும்; சீழ்ப்பிரமேகமும் நமைச்சலும் நீங்கும்